மேற்கு யேமனில் சண்டை தீவிரமடைந்து வரும் நிலையில், ஹூதி அமைப்பினருக்கு ஆதரவாகவும், சவுதி அரேபியாவுக்கு எதிராகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் யேமன் தலைநகர் சணாவின் (Sanaa) வீதிகளில் திரண்டு பேரணி நடத்தினர்.
இந்த டையலை யேமனின் தென்மேற்கு பகுதியிலுள்ள தைஸ் மாகாணத்தின் அல்-வாசியா (Al-Waziiyah) மாவட்டத்தில் நடந்த கடுமையான மோதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 30 ஹூதி போராளிகள் கொல்லப்பட்டதாக யேமன் அரசுப்படைகள் தெரிவித்துள்ளன.
இந்தச் சண்டையில் 60க்கும் மேற்பட்ட ஹூதி அமைப்பினர் காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையில் யேமன் அரசுப்படையினர் மற்றும் வான்படை, அல்-வாசியா மாவட்டத்தில் உள்ள ஹூதிகளின் வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் கூட்டங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக யேமன் ஆயுதப் படைகளின் ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது.