ஸ்கார்பரோவில் விபத்து: இருவர் பலத்த காயம், ஒருவர் கைது

ஸ்கார்பரோவில்   ஏற்பட்டதாகக் கூறப்படும் பயங்கர விபத்தின் (Street Racing) திடுக்கிடும் தருணங்கள் டேஷ்கேம் (Dashcam) கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த விபத்து தொடர்பாக ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த விபத்தில் இருவர் ஆபத்தான நிலையில் படுகாயமடைந்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, ஜூலை 17 ஆம் திகதி காலை 9:30 மணியளவில் மெடோவேல் வீதிக்கு (Meadowvale Road) அருகில் உள்ள ஹைவே 2A (Highway 2A) கிழக்கு நோக்கிய பாதையில், பச்சை நிற ‘லம்போர்கினி’ (Lamborghini) ரக சொகுசு காரும், வெள்ளை நிற ‘மெர்சிடீஸ் ஈ-கிளாஸ்’ (Mercedes E-Class) காரும் அதிவேகத்தில் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளன.

ஒரு கட்டத்தில், மெர்சிடீஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து, அங்கே சென்று கொண்டிருந்த வெள்ளை நிற ‘போர்டு F-150’ (Ford F-150) ரக பிக்கப் டிரக் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்பின்னர், மெர்சிடீஸ் கார் பாதையை விட்டு விலகி மரத்தின் மீதும் மோதியுள்ளது.

சம்பவ இடத்திலிருந்து லம்போர்கினி காரை ஓட்டி வந்தவர் தப்பிச் சென்றுவிட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

பிக்கப் டிரக்கில் பயணித்த 44 வயதுடைய நபர் மற்றும் 11 மாத ஆண் குழந்தை ஆகிய இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதேவேளை, மெர்சிடீஸ் காரை ஓட்டிச் சென்ற 15 வயது சிறுவன் மற்றும் அதில் பயணித்த 24 வயது நபர் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதனையடுத்து, விபத்தில் தொடர்புடைய லம்போர்கினி காரின் ஓட்டுநரை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் ரொறன்ரோவைச் சேர்ந்த 42 வயதான அகில் கோர்டன் ஹேவுட் (Akil Gordon Heywood) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கி உடற்காயம் ஏற்படுத்தியமை (இரண்டு குற்றச்சாட்டுகள்), விபத்து நடந்த இடத்தில் நிறுத்தாமல் தப்பிச் சென்றமை மற்றும் ஆபத்தான முறையில் கார் சாகசப் போட்டியில் ஈடுபட்டமை (Stunt driving) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரின் தற்போதைய நிலை குறித்து பொலிஸார் கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை. மேலும், இது தொடர்பாக மேலதிக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுமா என்பதும் தெரிவிக்கப்படவில்லை.

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,