டொராண்டோ மாநகரத்தின் 911 அவசர அழைப்பு சேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவேகமாக மாற்றமடைந்துள்ளது.
2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஒரு அவசர அழைப்பிற்குப் பதில் கிடைக்க எடுத்துக்கொள்ளப்படும் சராசரி நேரம் வெறும் 3 வினாடிகளாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அவசர காலங்களில் 911-க்கு அழைக்கும்போது, பயணிகள் 10 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை இருந்தது.
இதனைச் சீர்செய்ய எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகளே தற்போது பலன் அளித்துள்ளன.
அவசரமற்ற புகார்களை கையாள பிப்ரவரி முதல் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.