வெளிநாட்டவர்களுக்கு கட்டண அறவீடின்றி வீசா கால நீடிப்பு!

மத்தியகிழக்கு ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கு கட்டண அறவீடின்றி வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவுகின்ற சூழ்நிலையால் இப்பிராந்தியத்திற்கு 2026.02.28 தொடக்கம் விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால், எமது நாட்டிலிருந்து வெளியேறிச் செல்வதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டவர்கள் தமது வீசா காலப்பகுதி முடிவடைவதற்கு முன்னர் வெளியேறிச் செல்வதற்கு இயலாமல் போயுள்ளது.

இவ்விசேட நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவ்வாறான பயணிகளுக்கு மாற்று வழிப்பயணங்களை தயார் செய்வதற்கு இயலுமை கிடைக்கும் வரைக்கும் இலங்கையில் சட்டபூர்வமாகத் தங்கியிருப்பதற்கான வசதிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கமைய, 2026.02.28 ஆம் திகதி தொடக்கம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேற்கொள்ளப்படவிருந்த விமானப் பயணங்களை இரத்துச் செய்தமையால், எமது நாட்டிலிருந்து வெளியேறிச் செல்வதற்கு இயலாமல் போயுள்ள வெளிநாட்டவர்களுக்கு 14 நாட்கள் காலப்பகுதிக்கு கட்டண அறவீடின்றி வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாறான விமான பயணங்கள் இரத்துச் செய்யப்படல் நிலவினால் அவர்களது வீசாவை நீடிப்பதற்கான காலத்தை மேலும் 14 நாட்கள் வரை கட்டணமின்றி நீடிப்பதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

i

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிப்பு

March 11, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் ஏனைய இலக்குகள் மீது ஈரான் புதிய தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

did

9 மாவட்டங்களில் நன்னீர் மீன்பிடிப் படகுகளின் திருத்தப் பணிகள் நிறைவு!

March 11, 2026

திட்வா புயலால் நாடு முழுவதிலும் உள்ள மீனவ சமூகத்தின் மீன்பிடிக் கலன்கள் மற்றும் உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆறு (06)

CEB

12,000 இற்கும் அதிகமான மின் தடைகள்!

March 11, 2026

கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று (10) பிற்பகல் மற்றும் இரவு

cru

கச்சா எண்ணெய் விலை சரிவு

March 11, 2026

உலகச் சந்தையில் மிக வேகமாக அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலையானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

he

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

March 11, 2026

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், அது “வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை தீவிரப்படுத்தும்” என்றும் ஐக்கிய

is

இலங்கைத் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

March 11, 2026

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும்போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கைத்

d

பராமரிப்பு நிலையத்தில் 18 மாதக் குழந்தை குளத்தில் விழுந்து உயிரிழப்பு

March 11, 2026

பகல்நேர பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த 18 மாதக் குழந்தை ஒன்று, அங்கிருந்த குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ள சோகமான சம்பவம்

WhatsApp Image 2026-03-11 at 10.43.39

பிராம்டனில் வாகனங்களை திருடிய இளைஞர் கைது

March 11, 2026

பீல் பிராந்தியத்தின் மத்திய கொள்ளைத் தடுப்பு பிரிவு (Central Robbery Bureau) விசாரணையாளர்கள், பிராம்டனில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி ரைடு-ஷேர்

lo

அரசாங்கம் மக்களின் சுமையை மேலும் அதிகரித்திருக்கிறது – யுக்திய கூட்டமைப்பு

March 11, 2026

அரசாங்கம் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம், ஏற்கனவே மக்கள் முகங்கொடுத்திருக்கும் தாங்கமுடியாத சுமையை

man

தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்குக

March 11, 2026

மத்திய கிழக்கு போர்ச் சூழல் தீவிரமடைவதற்கு முன்னரே இலங்கையில் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து எச்சரிக்கப்பட்டிருந்த

tra_An

இ.போ.சபைக்கு புதிய கலாசாரத்தைக் கொண்டு வர பாடுபடுவோம்

March 11, 2026

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான,தொடர்ச்சியான மற்றும் ஒரு பலமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக

wash

140 அமெரிக்க வீரர்கள் காயம் – பென்டகன்

March 11, 2026

ஈரான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பத்திலிருந்து இதுவரை சுமார் 140 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் எட்டு பேர்