வெலிக்கடை சிறைச்சாலை பற்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

வெலிக்கடை சிறைச்சாலையைப் பரிசோதிப்பதற்காகச் சென்ற தங்களது அதிகாரிகளை சிறைச்சாலைக்குள் அனுமதிக்காமை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடுமையான கவலையையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை 7ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று வெலிக்கடை சிறைச்சாலையைப் பரிசோதிப்பதற்காகச் சென்றிருந்த போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.

முன்அறிவித்தல் இன்றி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தடுப்புக் காவலில் உள்ள இடங்களுக்குள் நுழைவதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் அளிக்கும் 1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தை, சிறைச்சாலை அதிகாரிகள் இதன் மூலம் மீறியுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனியவின் தலைமையில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அந்தச் சந்தர்ப்பத்தில் சிறைச்சாலைக்குள் நிலவிய ஸ்திரமற்ற பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாகவே ஆணைக்குழுவின் அதிகாரிகளை உள்ளே அனுமதிக்கவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அச்சந்தர்ப்பத்தில் நிலவிய உண்மையான சூழ்நிலையை ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்குச் சரியாகத் தெரிவிக்கத் தவறியமை குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் அங்கு வருத்தம் தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காது எனவும் உறுதியளித்துள்ளனர்.

இருப்பினும், சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கிய இந்த விளக்கத்தில் தமக்குத் திருப்தி இல்லை என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதைத் தவிர, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது பழிவாங்கும் நோக்கில் சித்திரவதைகளை மேற்கொள்ளல், மருத்துவ சிகிச்சைகளை மறுத்தல், கைதிகள் இருக்கும் இடங்களை அவர்களது குடும்பத்தினருக்கு அறிவிக்கத் தாமதித்தல் மற்றும் தண்டனைக் காலம் முடிந்த கைதிகளையும் தொடர்ந்தும் தடுத்து வைத்திருத்தல் போன்ற பல கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்தும் ஆணைக்குழு இதன்போது கேள்வி எழுப்பியுள்ளது.

சிறைச்சாலைக் காவலில் உள்ளவர்களுக்கு இடம்பெற்ற சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டமை மற்றும் மரணங்கள் குறித்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு, வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவத்தைக் கருத்திற்கொண்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் பின்வரும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தடுப்புக் காவலிலுள்ள இடங்களைப் பரிசோதிப்பதற்கு ஆணைக்குழுவிற்கு சட்டப்பூர்வமாக உள்ள உரிமையை உடனடியாக வழங்குதல்.

இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல்களை உடனடியாக நிறுத்துதல்.

கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு உடனடியாக அறிவித்தல்.

விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்தை நிறைவு செய்துள்ள கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தல்.

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்

Tamil_News_lrg_432121120260912210533

லண்டன் கார் பந்தயம்: விபத்தைத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்து நடிகர் அஜித் சாதனை!

September 13, 2026

லண்டன்: லண்டனில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த புகழ்பெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) கார்

images - 2026-09-13T133956.877

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை!” – அவதூறு பேச்சுகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம்

September 13, 2026

சென்னை: அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவதும் மிரட்டல் விடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை