பத்து ஒன்றுடன் தொடர்புடைய நபரிடம் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கறைப்பற்று பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டவரை நீதிமன்றத்திற்குச் செல்லவிடாது தடுத்து, அதனைச் சமரசமாக முடித்து வைப்பதாகக் கூறி, விபத்தை ஏற்படுத்தியவரிடம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பணம் கோரியுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய நபர், 4,000 ரூபாவினை லஞ்சமாக வழங்க முயன்றபோது, அங்கு சிவில் உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அந்த பொலிஸ் உத்தியோகத்தரை கையும் மெய்யுமாகக் கைது செய்தனர்.