புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 பிரதான வீதியின் பூதூர் பகுதியில், வவுனியா திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகிப் பாதுகாப்புக் வேட்டியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை (25) அன்று பகல் ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பின்னால் அமர்ந்து பயணம் செய்த பெண் காயமடைந்து வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மரணமடைந்தவர் 23 வயதுடைய உளுக்குளம் பகுதியைச் சேர்ந்தவராவார். புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.