திண்டுக்கல்:
விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
பூக்களின் தேவை அதிகரிப்பு மற்றும் கடந்த சில மாதங்களாக நிலவிய வறட்சியால் ஏற்பட்ட உற்பத்தி குறைவு காரணமாக, பண்டிகைக் காலமான தற்போது பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் பூ மார்க்கெட் விலை நிலவரம் (ஒரு கிலோ):
-
மல்லிகை: ரூ. 500-லிருந்து ரூ. 1,300 முதல் ரூ. 1,500 வரை உயர்வு.
-
முல்லை: ரூ. 400-லிருந்து ரூ. 1,000 ஆக உயர்வு.
-
ரோஜா: ரூ. 200-லிருந்து ரூ. 500 ஆக உயர்வு.
-
செவ்வந்தி: ரூ. 100-லிருந்து ரூ. 400 ஆக உயர்வு.
-
சம்பங்கி: ரூ. 700-க்கு விற்பனை.
-
கனகாம்பரம்: ரூ. 1,200-க்கு விற்பனை.
திடீர் விலை உயர்வால் பூக்கள் வாங்க வரும் பொதுமக்களும் வியாபாரிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Hashtags:
#Dindigul #NilakottaiFlowerMarket #FlowerPriceHike #VinayagarChaturthi #JasminePrice #TamilNaduNews #TamilNews #BreakingNewsTamil