போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை இணைய வழி மூலம் செலுத்தும் முறை அறிமுகம்!

நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளுக்கான போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GOV PAY செயலியூடாக ஒன்லைனில் செலுத்தும் முன்னோடி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் நுவரெலியா மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி நுவரெலியா பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவினர், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திட்ட அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

அரசாங்க டிஜிட்டல் கட்டணத்தளமான GovPay மூலம் அபராதம் செலுத்த தேவையான அனைத்து வசதிகளும் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது இதன் ஒரு கட்டமாக நுவரெலியாவில் குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது பொலிஸாருக்குரிய தேவையான நவீன உபகரணங்களும் வழங்கப்பட்டது .

இதில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GOV PAY செயலியூடாக பணம் செலுத்தியதை உறுதிப்படுத்தும் தகவல் உடனடியாக சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு சமர்பிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் பணம் செலுத்திய தகவல்கள் உறுதிப்படுத்திய பின்னர் அவ்விடத்திலேயே சாரதி அனுமதிப்பத்திரத்தை மீளப்பெற்றுக் கொள்ளும் வசதிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இதன் மூலம் வாகன விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்படும் சாரதிகள் இனி அபராதம் செலுத்துவதற்காக அலுவலகங்களுக்குச் சென்று நேரத்தை விரயமாக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அதிகாரிகள் தெளிவுப்படுத்தினர்.

குறித்த திட்டம் அறிமுகம் செய்வதற்கு முன்னர் ​​போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரால் விதிக்கப்படும் அபராதத் தொகை தபால் அலுவலகத்திலேயே தற்போது செலுத்தப்படுகின்றது. அபராதத்தை செலுத்தியதற்கான பற்றுச்சீட்டை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்ததன் பின்னரே சாரதி அனுமதிப்பத்திரத்தை மீளப்பெறும் நிலை இருந்தது.

photo-collage.png (3)

சிறுவர்கள் மற்றும் குழந்தை என்புகூடுகள் செம்மணியில் இன்றும் மீட்பு!

June 14, 2026

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஒரு குழந்தையின் என்புக்கூடும், நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள்

che

நான் சாகடிக்கப்படலாம் ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டேன் – சேகுவேரா; இன்று பிறந்தநாள்!

June 14, 2026

சேகுவேரா அல்லது சே என்று அழைக்கப்படும் இவர் ஜூன் 14 1928 ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவிலுள்ள ரொசாரியோ என்னும் இடத்தில்

photo-collage.png (2)

காலி முகத்திடலில் பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலக சாதனை முயற்சி

June 14, 2026

கொழும்பில் இன்று(14) வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார நிகழ்வொன்று இடம்பெற்றள்ளது. 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து நடனமாடி,

anura may 26

சுரேஷ் சலேயின் உடல்நிலை: ஜனாதிபதியின் தலையீட்டைக் கோருகிறது ‘சர்வஜன பலய

June 14, 2026

கொழும்பு: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் தலைவர், ஓய்வுபெற்ற

Rain

எல் நினோ (El Niño) தாக்கம்: இலங்கையில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கனமழை மற்றும் வெள்ள அபாயம்

June 14, 2026

கொழும்பு: பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, இந்த ஆண்டு ஒக்டோபர்

Devanesan

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் மிகமுக்கிய ஆவணத்தைத் தயாரித்த தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் ஆளுமை கலாநிதி தேவநேசன் நேசையா காலமானார்!

June 14, 2026

இலங்கையின் அரச நிர்வாகத்துறையிலும், சிவில் சமூகப்பரப்பிலும் கொள்கை உறுதிப்பாட்டுடன் நீண்டகாலம் பணியாற்றியவரும், தமிழ்ச்சமூகத்தை சர்வதேச தளங்களில் பிரதிநிதித்துவப்படுத்திய ஆளுமையாகவும் திகழ்ந்த

nay

நாளை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்றம்

June 14, 2026

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை (15) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து

tu

துருக்கியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி!

June 14, 2026

2026 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் ‘D’ குழுவில் துருக்கியுடன் நடைபெற்ற போட்டியில், அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கோல்

dd

இரு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு நாடுகடத்தல்

June 14, 2026

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ‘மோதர நிபுண’ என்பவரின் சகோதரர்

3

“ரஜினிகாந்த் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது!” – அண்ணாமலை, லாரன்ஸ் விவகாரத்தில் ரஜினி நற்பணி மன்றம் அசுர வேக அறிக்கை!

June 14, 2026

சென்னை: “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரையோ அல்லது அவரது புகைப்படத்தையோ எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ தங்களது சுயலாபத்திற்காகப்

2

“திமுக-வை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை; டாஸ்மாக் ரெய்டுக்காக டெல்லி சென்றவர் ஸ்டாலின்!” – திமுக தலைவருக்குத் தவெக ஐடி விங் அசுர வேக மாஸ் பதிலடி!

June 14, 2026

சென்னை: “வாய்ப்பு கிடைக்கும் துறைகளில் எல்லாம் மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக

1

“சாதி, மத, பணபல அரசியலைக் கடந்து மக்கள் மௌனப் புரட்சி செய்துள்ளனர்!” – திமுக கூட்டணி குறித்து துரை வைகோ அசுர வேக அதிரடிப் பேட்டி!

June 14, 2026

மதுரை: “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாதி, மத, பணபல அரசியலை அடியோடு தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் மாபெரும் மௌனப்