விஜய் பதவியேற்பதில் சிக்கல் நீடிக்கிறது…

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கட்டாயம் தேவை என்பதை ஆளுநர் மாளிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், விஜய் பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற சூழலில், காங்கிரஸின் ஆதரவை விஜய் கோரினார். இதன் தொடர்ச்சியாக, 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் விஜய்யிடம் தங்கள் ஆதரவுக் கடிதத்தை 6-ம் தேதி வழங்கினர்.

இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுக் கடிதத்துடன் அன்றைய தினமே ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய், தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லாததால், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில், விஜய் நேற்று காலை மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநரை சந்தித்தார். அப்போது, சட்ட நுணுக்கங்களுடன் கூடிய பல்வேறு ஆவணங்களை விஜய் அளித்துள்ளார். ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுமார் 40 நிமிடங்கள் அவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது ஆளுநர் அர்லேகர், ‘‘ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு முன்பே, அதற்கு தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது’’ என்று உறுதிபட தெரிவித்தார்.

இதன்பிறகு, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு திரும்பிய விஜய், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தேவைப்படும் 5 இடங்களுக்கு விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்துவது, திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவைக் கோருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆளுநரின் முடிவை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதா, திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதை தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரும் நடவடிக்கையில் தவெக முக்கிய நிர்வாகிகள் நேரடியாக களத்தில் இறங்கினர். சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோரை தவெக துணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல்குமார் சந்தித்து, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளோம். ஆலோசித்துவிட்டு முடிவை அறிவிப்பார்கள். விஜய் ஏற்கெனவே கூறியபடி, எங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் கட்டாயம் பங்கு வழங்கப்படும்’’ என்றார்.

சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் கட்சித் தலைவர் காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் உள்ளிட்ட நிர்வாகிகளை தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் நேற்று சந்தித்து ஆதரவு கோரினார். அவரிடம் காதர் மொகிதீன், ‘‘நாங்கள் திமுக கூட்டணியில் உள்ளோம். திமுக எடுக்கும் நிலைப்பாடுதான் எங்கள் நிலைப்பாடு. ஸ்டாலின் சொன்னால் ஆதரவு அளிக்கிறோம்’’ என்று கூறியுள்ளார். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிப்பதாகவும் கூறியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவனிடம் தவெக முக்கிய தலைவர்கள் தொலைபேசி வாயிலாக பேசியதாக கூறப்படுகிறது. அவரை நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

savak

சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

July 28, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி

arjun

அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை

July 28, 2026

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி

ne

நீர்கொழும்பு சிறை கலவரம்;சந்தேக நபர்களாக நால்வர்!

July 28, 2026

அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் மற்றும் 6ஆம்

ner

அரச சேவையில் தேசிய நேர்மை வாரம்!

July 28, 2026

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா”

photo-collage.png (3)

ஓகஸ்ட் 30; சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் குறித்த விசேட சந்திப்பு

July 28, 2026

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில்

sea

அவசர வானிலை எச்சரிக்கை!

July 28, 2026

பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது

sa

நாட்டை அரசாங்கம் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது…

July 28, 2026

தற்போது இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள்

spo

மெய்வல்லுநர் தெரிவுக்குழு இராஜினாமா!

July 28, 2026

இலங்கை மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தெரிவுக்குழு உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக

YQIVVADQMVALHP6FFWJKTJMBMI

அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் பயணித்த வாகனம் 140 கி.மீ வேகத்தைத் தொட்டதால் பொலிஸார் துரத்துவதைக் கைவிட்டனர்

July 28, 2026

திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரின் வாகனத்தைப் பொலிஸார் டான் வேலி பார்க்வேயில்

Arrest

தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது

July 28, 2026

ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை,

rain cana

ஜி.டி.ஏ (GTA) பகுதியில் 50 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என்பதால் வெள்ளப்பெருக்கு அபாயம்

July 28, 2026

டொராண்டோ நகரில் இன்று இரவு கனமழையும் இடியுடன் கூடிய புயலும் வீசக்கூடும் என்பதால், ‘டொராண்டோ மற்றும் பிராந்திய பாதுகாப்பு அதிகாரசபை’

namal

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சி – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

July 27, 2026

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் தார்மீக