விசேட செயற்குழு மீது நம்பிக்கை இல்லை – இந்திக அனுருத்த

மாகாணசபைத் தேர்தல் முறைமையில் சட்ட சிக்கலை ஏற்படுத்த நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிக்கு மக்கள் விடுதலை முன்னணியினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள். மாகாணசபைத் தேர்தலை எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள விசேட செயற்குழு மீது நம்பிக்கை கிடையாது எனஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று நடுத்தர மக்களுக்கு எதிராக செயற்படுகிறது. நடுத்தர மக்கள் எதிர்க்கொள்ளும் எவ்வித பிரச்சினைகளுக்கும் இதுவரையில் தீர்வு முன்வைக்கப்படவில்லை.

எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். தரமற்ற நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.இதனால் எதிர்வரும் காலங்களில் மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக் கூடும்.தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் ஏற்பட்ட நட்டத்துக்கு யார் பொறுப்புக்கூறுவது.

ஊழலுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்த நிலையில் காணப்படுகிறது. நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை 65 சதவீதமளவில் உயர்வடைந்துள்ளதாக தற்போது குறிப்பிடப்படுகிறது. அவ்வாறாயின் மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் உடன் நடத்தலாமே.அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. ஆகவே எல்லை நிர்ணய பிரச்சினைக்கு ஒருவாரத்துக்குள் தீர்வு கண்டு, தேர்தலை நடத்தலாம்.

மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையில் நடத்துவது என்று ஆராய்ந்து விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு புதிய தேர்தல் முறைமை ஊடாக மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சட்டசிக்கல்களினால் மாகாணசபைத் தேர்தல்கள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.மக்கள் விடுதலை முன்னணியினர் மாகாணசபை முறைமைக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்கள். ஆகவே அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழு மீது நம்பிக்கை கிடையாது என்றார்.

tab

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மண்டபத்தில் பறிமுதல்

March 4, 2026

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும்

Death-2

பண்டாரவளை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

March 4, 2026

பண்டாரவளை, கடுகஹ லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து புதன்கிழமை (4) அன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார்

Rad

ஒரு பெண் சடலமாகி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இல்லை?

March 4, 2026

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த

nia

நயாகரா பிராந்திய காவல்துறையால் 9-1-1 தொழில்நுட்பம் புதுப்பிப்பு!

March 4, 2026

நயாகரா பிராந்திய காவல்துறை சேவை வழங்குநர்கள் அடுத்த 9-1-1 (NG9-1-1) தலைமுறைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க, 9-1-1 தொழில்நுட்பத்தை புதுப்பித்து

ford

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள்திட்டம் மிக விரைவில் நிறைவு பெறும் – ஒன்டாரியோ முதல்வர்

March 4, 2026

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள் திட்டமிட்ட கால அட்டவணையை விட முன்பே நிறைவு

ne

“ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்” – இஸ்‌ரேல் எச்சரிக்கை

March 4, 2026

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்‌ரேல் எச்சரிக்கை

boa

வலி. வடக்கு ஊரணி மீனவர்கள் இருவர் காணமற் போயுள்ளமை குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை

March 4, 2026

யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம்

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய