மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கன்னங்குடா, புதுமண்டபத்தடி பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய முதியவர்.
கடந்த சனிக்கிழமை (13) இரவு, கல்லடி விசேட அதிரடிப்படை (STF) முகாமிலிருந்து தாண்டியடி முகாமிற்குச் சென்று கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் ஜீப் வண்டி, பரித்திச்சேனை சந்தியில் எதிரே வந்த சைக்கிள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் சைக்கிளில் பயணித்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய விசேட அதிரடிப்படையின் ஜீப் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வவுணதீவு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.