வாட்ஸ்அப் குழு மூலம் பரிசுப் பொதி தருவதாகக் கூறி இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த பெண் கைது! வாட்ஸ்அப் குழு (WhatsApp Group) ஒன்றின் மூலம் பெறுமதியான பரிசுப் பொதியொன்றை வழங்குவதாகக் கூறி, ரூபா 1,455,000/- (பதினான்கு இலட்சத்து ஐம்பத்தைந்தாயிரம் ரூபாய்) பணத்தைச் சந்தேகநபரான பெண்ணின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்ய வைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
இதனையடுத்து, கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண அலகினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி, இம் மோசதியுடன் தொடர்புடைய 46 வயதுடைய நுகேகொடைப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சந்தேகநபர், 2026.10.30 அன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தில் வைத்து விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண அலகினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.