தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை (19) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வானது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் வவுனியா ஏ9 வீதியில் 3356 வது நாளாக சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபடும் பந்தலில் இடம்பெற்றது.
இதன்போது அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு விளக்கேற்றி, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வு அமைதியான முறையில் இடம்பெற்றதுடன், அன்னை பூபதியின் தியாகம் மற்றும் உரிமை கோரிய போராட்டங்கள் மீண்டும் நினைவுகூரப்பட்டன.
இதேவேளை அன்னை பூபதியின் நினைவு தினம் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.