வலிகாமம் வடக்கு தையிட்டி தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் திகதி காணி அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

“விகாரை அமைந்துள்ள மற்றும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகள் எதிர்வரும் 17ஆம் திகதி நில அளவைத் திணைக்கள அதிகாரிகளால் அளவீடு செய்யப்படும். காணி அளவீடுகள் நிறைவடைந்ததும், உரிய ஆவணங்களின் அடிப்படையில் காணி உரிமையாளர்கள் யார் என்பது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படும்.

அவ்வாறு உரிமையாளர்கள் உறுதி செய்யப்பட்ட பின்னர், மிக விரைவான காலப்பகுதிக்குள் அந்தக் காணிகளை மீண்டும் மக்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

தையிட்டியில் தனியார் காணிகளைச் சுவீகரித்து சட்டவிரோதமான முறையில் விகாரை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் தரப்பினர் நீண்டகாலமாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். புதிய அரசாங்கம் பதவியேற்றதைத் தொடர்ந்து, இந்தக் காணிகளை விடுவிப்பதற்கான நகர்வுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

sa

அமெரிக்கா – ஈரான் பதற்றம்: சவுதி இளவரசருடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு

April 16, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிப்பதற்காகப் பாகிஸ்தான் எடுத்து வரும் முயற்சிகள் குறித்துப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சவுதி

ver

வெருகல் ஆறு: இருவரின் சடலங்கள் மீட்பு

April 16, 2026

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை மற்றும் நான்கு மகன்களில், காணாமல் போன மூவரில்

IMF

உலகப் பொருளாதாரத்தில் தாக்கம்

April 16, 2026

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் ஏற்கனவே உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு சுமையாக மாறியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதன்

Death-2

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்த இளைஞன் பலி

April 16, 2026

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளர்.

ja

யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகவியல் பாட மாணவர்களுக்கு செயலமர்வு

April 16, 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகவியல் பாட மாணவர்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான செயலமர்வு நல்லூர் பிரதேச சபையில்

batt

மட்டக்களப்பு நாவற்குடா விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டு வைத்தியசாலையில் அனுமதி

April 16, 2026

நேற்று (15) மட்டக்களப்பு நாவற்குடா உள்வீதியொன்றில் தேவாலயம் அருகில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

Pol

பெருமளவு பணத்துடன் கைப்பையை தொலைத்த யாழ்வாசி – கண்டெடுத்து ஒப்படைத்த பொலிஸ் அதிகாரி

April 16, 2026

தொலைந்து போன யாழ்ப்பாண வாசியின் பணப் பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்த

ckai

கைவிசேடம் வழங்கும் நிகழ்வு

April 16, 2026

யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (15.04.2026)

interf

வங்கி மோசடி குறித்து விசாரிக்க சர்வதேச பொலிஸார் இலங்கை வருகை

April 16, 2026

தேசிய அபிவிருத்தி வங்கியின் தரவுக் கட்டமைப்புக்குள் ஊடுருவி 13.2 பில்லியன் ரூபா நிதியை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், சர்வதேச

download

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 38 வயதுடையவர் கைது; யாழ். மூளாயில் சம்பவம்

April 16, 2026

யாழ்ப்பாணத்தில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய நபர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

mon

மகளை சுத்தியலால் தாக்கி கொலை முயற்சி: 56 வயது தந்தை மீது குற்றச்சாட்டு

April 16, 2026

மொண்ட்ரியலின் மேற்குப் பகுதியில் தனது மகளைச் சுத்தியலால் தாக்கியதாகக் கூறப்படும் 56 வயது நபர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

ir

அமெரிக்கா – ஈரான் போர்நிறுத்தத்தை நீட்டிக்க மறைமுகப் பேச்சுவார்த்தை: வெள்ளை மாளிகை நம்பிக்கை

April 16, 2026

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு வார காலப் போர்நிறுத்தம் வரும் ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதனை நீட்டிப்பதற்கான