நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காணமாக தண்ணீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தண்ணீரை வீணாக்க வேண்டாம் என நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தலைவர், பொறியாளர் சந்தன பண்டார விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக தண்ணீர் வழங்குவதில் சில சிரமங்கள் ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தவிர்க்க, தண்ணீரை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேவையற்ற முறையில் நீரை வீணாக்கக் கூடாது எனவும் அவர் பொதுமக்களிடம் கேட்டு்ககொண்டுள்ளார்.