வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் சதொச ஊழியர்களை அவர்களது உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை, மேலதிக சாட்சி விசாரணைக்காக மார்ச் மாதம் 18ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வேறொரு வழக்குக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மொஹமட் சாகீர் ஆகிய பிரதிவாதிகள் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கை மார்ச் மாதம் 18ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய போது, சதொச ஊழியர்களை அவர்களின் சட்டபூர்வமான கடமைகளில் இருந்து விடுவித்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் செயற்பாட்டு பணிப்பாளரான மொஹமட் சாகீர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

war

கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

March 7, 2026

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட கப்​பல்​களை தகர்த்​த​தாக​வும், கடந்த 72 மணி நேரத்​தில்

mur

முதியவர் அடித்துக் கொலை: ஒருவர் கைது!

March 7, 2026

மின்னேரியா – ரொட்டவெவ பகுதியில், தனது சகோதரியைக் காப்பாற்றச் சென்ற முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்

wate

கடலில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இருவர் மீட்பு!

March 7, 2026

ஹிக்கடுவை துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடலில் நீராடச் சென்று, கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

ko

கோடாவுடன் இருவர் கைது!

March 7, 2026

கட்டுநாயக்க – தடுகங்ஓயா பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை

arrest

அக்குரேகொட இரட்டைக் கொலைக்கு உதவிய மேலும் இருவர் கைது!

March 7, 2026

தலங்கமை – அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு

acc

பிரதான வீதியில் லொறி மோதி பாதசாரி உயிரிழப்பு

March 7, 2026

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்

t

நிபந்தனையற்ற சரணாகதி தவிர ஈரானுக்கு வழியில்லை – ட்ரம்ப் எச்சரிக்கை

March 7, 2026

ஈரானுடனான போர் தீவிரமடைந்த நிலையில், நிபந்தனையற்ற சரணாகதி தவிர வேறு எந்த ஒப்பந்தத்திற்கும் இடமில்லை என்று அமெரிக்க ஜனனாதிபதி டொனால்ட்

ir

இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்

March 7, 2026

ஐக்கிய அமெரிக்காவானது தாம் இவ்வாரம் மூழ்கடித்த ஈரானிய போர்க்கப்பலில் உயிர் தப்பியவர்களையும் இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள இரண்டாவது ஈரானியக் கப்பலின் மாலுமிகளையும்

sa

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அடக்குமுறை நடந்திருந்தால் ஆதாரத்தை முன்வையுங்கள்!

March 7, 2026

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், அதன் மூலம் ஏதேனும் அடக்குமுறைகள் இடம்பெற்றிருந்தால் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு பிரதமர்ஹரிணி

au

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் சடலமாக மீட்பு

March 7, 2026

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள லொட்ரோப் பகுதியில், உள்ள வீட்டில் இலங்கைப் பெண் உட்பட தம்பதி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள்

drone

நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பு

March 7, 2026

ட்ரோன்களை (Drone)பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான உணர்திறன் மிக்க தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைத்

ba

பாகிஸ்தான் தொடரிலிருந்து பங்களாதேஷ் முக்கிய வீரர்கள் விலகல்?

March 7, 2026

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியை அந்நாட்டு