வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்காக ஹோர்முஸ் நீரிணையை திறக்க 22 நாடுகள் கூட்டறிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த 28-ஆம் திகதி முதல் நடந்து வரும் போர், 4-வது வாரத்தை அடைந்துள்ளது.

ஈரான் மீது திடீரென போர் தொடுத்து அந்த நாட்டு அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்த அமெரிக்காவும், இஸ்ரேலும், தொடர்ந்து அந்த நாட்டை தாக்கி வருக்கின்றன.

இதனால் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் நிர் மூலமாக்கப்பட்டு உள்ளன.

இந்தபோரில் தங்கள் அதி உயர் தலைவரை முதல் நாளிலும், அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல தலைவர்களையும் பறிகொடுத்த ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.

3 வாரங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த போரில் ஈரான் முற்றிலும் சீரழிந்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.

குறிப்பாக ஈரானின் கடற்படைகள், விமானப்படைகள் அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

இப்படி வெற்றிக்களிப்பில் அமெரிக்கா இருந்து கொண்டிருக்கும்போது தான் ஈரான் தனது அடுத்த ஆயுதத்தை இறக்கி விட்டது.

அதாவது 4,000 கி.மீ. வரை சென்று தாக்கும் ஏவுகணையை யாரும் எதிர்பாராத வகையில் களத்தில் இறக்கி அமெரிக்காவை மட்டுமின்றி ஒட்டு மொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

இதன்படி இந்தியப்பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் அமைந்துள்ள சிறிய தீவான டியாகோ கார்சியாவில் இருக்கும் அமெரிக்கா- இங்கிலாந்து நாடுகளுக்கு சொந்தமான படைத்தளத்தை நோக்கி 2 ஏவுகணைகளை நேற்று வீசியது.

ஈரான் வீசிய இந்த நீண்ட தூர ஏவுகணை ‘கொரம்சாகர்-4’ வகையை சார்ந்தது ஆகும். நேற்று வீசப்பட்ட 2 ஏவுகணைகளிலும் சேதம் ஏற்படவில்லை என்றாலும், இந்த தாக்குதல் முயற்சியே அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.

இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு விதித்த தடையை நீக்க ஈரானுக்கு 22 நாடுகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பிற நாடுகள், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. பாதுகாப்பான பயணம் சர்வதேச சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் அவை கூறியுள்ளன.

இதன்படி ஐக்கிய அரபு இராச்சியம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான், கனடா, தென் கொரியா, நியூசிலாந்து, டென்மார்க், லாட்வியா, சுலோவீனியா, எஸ்டோனியா, நோர்வே, ஸ்வீடன், பின்லாந்து, செக் குடியரசு, ருமேனியா, பஹ்ரைன், லிதுவேனியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இணைந்து, தாக்குதல்களை நிறுத்தக் கோரி ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில், வளைகுடாவில் ஆயுதமற்ற வர்த்தகக் கப்பல்கள் மீதான ஈரானின் சமீபத்திய தாக்குதல்களையும், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆலைகள் உள்ளிட்ட பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களையும், ஈரானியப் படைகளால் ஹோர்முஸ் நீரிணை நடைமுறையில் மூடப்பட்டிருப்பதையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்,

தீவிரமடைந்து வரும் மோதல் குறித்து நாங்கள் எங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம்.

வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்காக நீரிணையை தடுக்கும் தனது அச்சுறுத்தல்கள், கண்ணிவெடிகள், டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் பிற முயற்சிகளை உடனடியாக நிறுத்துமாறும், ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம் 2817-க்கு இணங்குமாறும் ஈரானை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

d

ஊரெழுவில் பதுக்கி வைத்த எரிபொருள் மீட்பு

March 22, 2026

யாழ்ப்பாணம், ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் களஞ்சியசாலையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான எரிபொருட்கள், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப்

dd

செம்பியன்பற்று வடக்கு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

March 22, 2026

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆணின் சடலம் நேற்று (21) மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில்

sou

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி; தென்னாபிரிக்கா வெற்றி

March 22, 2026

நியூசிலாந்துக்கெதிரான நான்காவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா:

ba

எரிபொருள் விலையேற்றம்; பேக்கரிப் பொருட்கள் விலை குறித்த பேச்சுக்கள்…

March 22, 2026

எரிபொருள் விலையேற்றம் காரணமாக நிலவும் சவால்களைக் கருத்திற்கொண்டு, பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பான தீர்மானம் நாளை எடுக்கப்படவுள்ளதாக

Canada1111

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தை கனடா இராஜதந்திர ரீதியில் கையாளத் திட்டம்?

March 22, 2026

சர்வதேச கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் சட்டவிரோதமாக முடக்கியுள்ளதற்குக் கனடா உள்ளிட்ட ஏழு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

uk

பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை வைத்தியரின் குடும்பம் வசிப்பதில் சிக்கல்?

March 22, 2026

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் முதியோர் நல வைத்திய நிபுணராகப் பணியாற்றி, புற்றுநோயால் உயிரிழந்த இலங்கை வைத்தியர் வாசீஹரனின் குடும்பத்தினர்,

huwa

ஹவாய் தீவில் கடும் வெள்ளப்பெருக்கு

March 22, 2026

அமெரிக்காவின் ஹவாய் தீவில் நிலவும் கடும் சூறாவளி மற்றும் பலத்த மழையினால் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப் பெருக்கினால் பொதுமக்களின் இயல்பு

ff

பிரித்தானியாவின் அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அரபிக்கடலில் நிலைநிறுத்தம்!

March 22, 2026

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பிரித்தானிய அரச கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்

jaf

படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடலுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி

March 22, 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது. யாழ்ப்பாணம்

ceb dea

பூநகரியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

March 22, 2026

பூநகரி, சென்மன்குண்டு பகுதியில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்தார் தமது பயிர் நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில்

cont

எரிபொருள் விலையேற்றம்; கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

March 22, 2026

எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

ceb

அரசாங்கம் அவசர வேண்டுகோள்

March 22, 2026

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ