வரவு செலவுத் திட்டத்தில் கிடைக்கும் சலுகைகள்…

எதிர்வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்படவுள்ள 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நேற்று(10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்துத் தெரிவித்தார்.

அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் மூன்று வருடங்களில் பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சியை எட்டுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றார்.

இதற்கமைய, இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக 2,000 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான யோசனைகள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், முன்னர் ஜனாதிபதி குறிப்பிட்டது போல் சில தரப்பினருக்கு வரிச் சலுகைகளும் கிடைக்கும் என மேலும் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

“அடுத்த மூன்று ஆண்டுகளில் எங்கள் எதிர்பார்ப்பு பொருளாதாரத்தில் உயர் வளர்ச்சியை எட்டுவதாகும். ஒரு குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே அதைச் செய்ய வேண்டும். அதற்குப் பொருத்தமான யோசனைகள் முன்வைக்கப்படும். ஜனாதிபதி ஏற்கனவே கூறியது போல், சில துறைகளில் வரிச் சலுகைகள் வழங்கப்படும்.

ஆனால் பொருளாதாரம் ஸ்திரமாக உள்ளது என்பதற்காக அனைத்து வரிகளையும் கைவிட முடியாது. உலகப் பொருளாதாரச் சூழலைக் கருத்திற் கொண்டு சில வரிகளை மாற்றுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில வரிகளில் சலுகைகள் கிடைக்கும். அது தவிர, ஜனவரி மாதத்தில் அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வும் கிடைக்கும். 2025 ஏப்ரல், 2026 ஜனவரி மற்றும் 2027 ஜனவரி ஆகிய மாதங்களில் அடிப்படைச் சம்பளத்தில் உயர்வு வழங்கப்படும். அடுத்து சில துறைகளில் கொடுப்பனவுகள் அதிகரிக்கும். இவை அனைத்தையும் உள்ளடக்கியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் முன்னரே கூறியது போல, இந்த வரவு செலவுத் திட்டத்தில் 2,000 பில்லியன் ரூபா அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அடைவோம் என எதிர்பார்க்கிறோம். நடப்பு ஆண்டில், எரிபொருள் நிவாரணம் வழங்குவதற்காக மட்டுமே 98 பில்லியன் ரூபாவைச் செலவிட்டோம். ‘திட்வா’ நிவாரணம் வழங்குவதற்காக 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த நிலைமைகளுக்கு மத்தியிலும் பொருளாதாரத்தை நாங்கள் ஸ்திரமாகக் கொண்டு வந்தோம். இப்போது பொருளாதாரத்தை வளர்ப்பதற்குச் சில துறைகளுக்குக் கொடுப்பனவுகளை வழங்குதல், அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துதல் மற்றும் சில துறைகளின் மாற்றத்தை ஏற்படுத்தும் அபிவிருத்திக்கான சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது.” என்றார்.

anojan

அனோஜன் விடுதலை: அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கைவிட சவுதிதீர்மானம்

November 11, 2026

முகநூல் (Facebook) பதிவு ஒன்றின் காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு எதிரான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும்

sathu

சாதனை படைத்த திருகோணமலை மாணவி நிவாஷ்னி

November 11, 2026

இலங்கையின் 11 வயதுக்குட்பட்டோர் பெண்கள் விரைவு சதுரங்கத் தரவரிசையில் இரண்டாம் இடத்தையும், 1670 சர்வதேச மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் உலகளவில் 120ஆம்

shi

ஷிரான் பாசிக் வழக்கு ஒத்திவைப்பு

November 11, 2026

கொக்கேய்ன் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான்

co

வர்த்தக பெயர்களை பதிவு செய்ய புதிய நடைமுறை

November 11, 2026

நாட்டின் வர்த்தக நாமங்களை பதிவுசெய்யும் நடைமுறையை எளிய, மற்றும் இலகுவானதாக மாற்றும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எளிய மற்றும் ஒருங்கிணைந்த வணிகப்

tr

கொழும்பில் பறக்கத் தயாரான ஆளில்லாப் பயணிகள் ட்ரோன்

November 11, 2026

இலங்கையில் புதிய வான்வழிப் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்தும் முதற்கட்ட நடவடிக்கையாக, மின்சாரத்தில் இயங்கும் ஆளில்லா பயணிகள் விமான சேவையின் முதலாவது

hiru

ஹிருணிகாவின் மேன்முறையீட்டை விசாரிக்க மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம்

November 11, 2026

சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டை விசாரிப்பதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசரினால் மூவரடங்கிய

storm

பி.சி. புயல் காரணமாக நெடுஞ்சாலைகள் ‘குறுகிய கால அவகாச அறிவிப்பில் மூடல்’ செய்யப்படலாம்: மாகாண அரசு எச்சரிக்கை

November 11, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவின் (B.C.) தெற்கு கரையை ஒரு வலுவான புயல் தாக்கி வரும் நிலையில், நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி, மிகக்

B7EZQF5DBNA47F3OT3JV5ZRSXU

ஒரு தொடர் பயங்கரக் கனவு’: பிரிந்து வாழ்ந்த மனைவியின் கொலையில் கணவர் மீது குற்றம் சாட்டப்பட்டது

November 11, 2026

பிரிந்து வாழ்ந்த தனது மனைவியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர், கொலைக் குற்றச்சாட்டின் கீழ் முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது,

court-judge-hammer-gavel-696x398

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி! பல இலட்சம் ரூபாவுடன் தலைமறைவான நபர் – சொத்துக்களை அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவு

November 11, 2026

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பல இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரின்

court-judge-hammer-gavel-696x398

மண்டைதீவு மனித புதைகுழி விவகாரம் – இராணுவத்தினரின் வாக்குமூலம் பெறுவதில் தாமதம் – விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை – 2027 ஜனவரி 5 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!

November 11, 2026

1990 களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு

vetha111111

வடக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் – ஆளுநர்

November 11, 2026

வடக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வரவேற்பதாகத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இத்திட்டங்களை முன்னெடுக்கும்போது

Kasappa-Thera

அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராகப் கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று துறவிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்

November 11, 2026

அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வணக்கத்திற்குரிய பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த மதகுருமார்