வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் அரச நிலங்களின் மொத்த அளவு மாவட்ட ரீதியாக எவ்வளவு? – சாணக்கியன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரச நிலங்களின் மொத்த அளவு மாவட்ட ரீதியாக எவ்வளவு? தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலங்களின் அளவு, இடங்கள் மற்றும் திகதிகள் எவை? இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள நிலங்களின் அளவு எவ்வளவு? மற்றும் எஞ்சியுள்ள நிலங்களை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் காலவகாசம் என்ன என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள பின்னணியிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள கணிசமான அளவிலான பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் நிலங்கள் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன. பொதுமக்களின் காணிகள் இன்றளவில் விடுவிக்கப்படவில்லை.

தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் தேர்தல் விஞ்ஞாபனத்தில், இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதை விரைவுபடுத்துவதாகவும், பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீள்குடியேற்றத்திற்கு வசதி செய்வதாகவும் உறுதியளித்திருந்தது. எமது மக்களும் அந்த வாக்குறுதி மீது நம்பிக்கை கொண்டார்கள்.

பொதுமக்களின் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதும், பொதுமக்கள் வாழும் பகுதிகளில் நீண்டகாலமாக இராணுவம் நிலைகொண்டிருப்பதும், சாதாரண சிவில் நிர்வாகத்தைத் தாமதப்படுத்துவதுடன், நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளையும் பலவீனப்படுத்துகிறது. உண்மையான தேசிய பாதுகாப்புத் தேவைகள் தவிர, இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு நிகரான அளவிற்கு இராணுவப் பரவலாக்கம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படுவதும், இராணுவமயமாக்கல் நீக்கப்படுவதும் நல்லிணக்கம், மீள்குடியேற்றம் மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றிற்கு அவசியமானவையாகும்.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் நான் முன்வைத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, மட்டக்களப்பில் இரண்டு இராணுவ முகாம்கள் விடுவிக்கப்பட்டதை நான் வரவேற்கிறேன். ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இருப்பினும் நிலங்கள் விடுவிக்கப்படும் வேகம் மந்தமாக இருப்பதற்கு எதிராகப் பாதிக்கப்பட்ட பல சமூகங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரச நிலங்களின் மொத்த அளவு மாவட்ட ரீதியாக எவ்வளவு? தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலங்களின் அளவு, இடங்கள் மற்றும் தேதிகள் எவை? இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள நிலங்களின் அளவு எவ்வளவு? மற்றும் எஞ்சியுள்ள நிலங்களை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் காலவகாசம் என்ன?

16 கிராம சேவகர் பிரிவுகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படாமலும், மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முற்றிலுமாக விடுவிக்கப்படாமலும் உள்ள வலிகாமம் வடக்கில், பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதை நிறைவு செய்வதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மயிலிட்டி மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பாகவும், மயிலிட்டி கணிக்கமாதா கோவில், வசந்தபுரம் மணம்பிராய் பிள்ளையார் கோவில், புனித செபஸ்தியான் தேவாலயம், மயிலிட்டி ரோமன் கத்தோலிக்க பாடசாலை மற்றும் வஸாவிலான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயம் ஆகியவற்றுக்கான அணுகுமுறையை மீண்டும் வழங்குவதற்கும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபை விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள், 551வது பிரிவு பகுதியில் உள்ள நிலங்கள், மற்றும் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயம், இரணைமடு சந்தி மற்றும் விவசாயத் திணைக்களம் ஆகியவற்றை பாதிக்கும் வகையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவில் எஞ்சியுள்ள 59 ஏக்கர் பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மயிலிட்டித் துறை பகுதியில் 700 குடும்பங்களுக்குச் சொந்தமான 556 ஏக்கர் காணிகள் இன்றளவில் விடுவிக்கப்படவில்லை. கலைமகள் பாடசாலைக்கு சொந்தமான மைதானம் விடுவிக்கப்படவில்லை. பலாலி தெற்கு, கிழக்கு, வடக்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் 300 குடும்பங்களுக்குச் சொந்தமான 556 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவில்லை.

கரைச்சி நூலகம் விஸ்தரிப்புக்கும் காணி விடுவிக்கப்படவில்லை. இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சொந்தமான காணி கேப்பாபிளவு பகுதியில் 59.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவில்லை.

கேப்பாப்பிலவு பகுதியில் உள்ளவர்களுக்கு மாற்று காணி வழங்கப்பட்டதாக குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. சீனியாமோட்டை பகுதியில் 44 பேருக்கு தற்காலிக காணிகளே வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் குரும்பைச்சிட்டி பகுதியில் இந்து மயானத்துக்குரிய காணி விடுவிக்கப்படவில்லை. ஆகவே இந்த கேள்விகளுக்கு விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன் என்றார்.

b

குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

September 13, 2026

தெஹிவளை வீடொன்று மீது அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

bom

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

September 13, 2026

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்

pa

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

September 13, 2026

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து

thal

தலைமன்னார் கடலில் மணல்மேட்டில் வழிதவறியவரை மீட்ட கடற்படையினர்

September 13, 2026

இலங்கை கடற்படையினர் தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடலில் மணல்மேட்டில் வழிதவறிய நபர் ஒருவரை மீட்டதுடன், அந்த நபருக்கு தேவையான மனிதநேய

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை