இன்றைய இளைய தலைமுறையினர் தங்களுடைய பெரும்பாலான தருணங்களை பிரபல தனியார் செயலியான இன்ஸ்டாகிராம் எனும் சமூக வலைதளத்தில் செலவழித்து வருகிறார்கள். இதில் பிரபலமான நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடிக்கும் ‘லவ் 3.0’ எனும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் ராஜேஷ் வி.கே. இயக்கத்தில் உருவாகும் ‘லவ் 3.0’ படத்தில் அரனிகா ( ரீல்ஸ் அக்கா), கோயமுத்தூர் மாப்ள மற்றும் கார்த்திகேயன் (கே என் ஸ்மைலி ) ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு வைகுந்த் சீனிவாசன் இசையமைக்கிறார்.
சமூக விடயங்களை பேசும் இந்த திரைப்படத்தை மங்கி மைன்ட்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சிவக்குமார் தயாரிக்கிறார்.
இதன் தொடக்க விழா சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகத்தில் நடைபெற்றது. அந்நிகழ்விற்கு தயாரிப்பாளர் சௌந்தர்- இயக்குநர் ரஞ்சித் குமார் – பாடலாசிரியர் சொற்கோ ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.
இளம் தலைமுறையினரின் காதல் வாழ்க்கையைச் சொல்லும் இந்த திரைப்படத்தை சமூக ஊடக பிரபலங்கள் நடித்திருப்பது கவனத்தை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.