ரூ. 100 இலட்சம் நிதி முறைக்கேடு வழக்கு.. ஷிரந்தி ராஜபக்‌ஷவிற்கு ஒக். 13 வரை விளக்கமறியல்!

முன்னாள் ஜனாபதிதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவருக்கு இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவருமான பிரதீப் காரியவசம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஷிரந்தி ராஜபக்‌ஷவினால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட, சிரிலிய சவிய எனும் அமைப்பு தொடர்பில் இடம்பெற்ற நிதி முறைகேடு தொடர்பில், இலஞ்ச ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (07) காலை அவர் கைது செய்யப்பட்டார்.
கிருலப்பனையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த விடயம் தொடர்பில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
‘சிரிலிய சவிய’ (Siriliya Saviya) நிதியத்துடன் தொடர்புடைய கணக்கு ஒன்றின் ஊடாக அரசுக்குச் சொந்தமான வங்கி ஒன்றிலிருந்து ரூ. 10 மில்லியன் நிதியைப் பெற்றமை மற்றும் அதனை முறைகேடாகப் பயன்படுத்தியமை, பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பிலேயே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் (FCID) அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக செல்வதாக சிங்கப்பூர் சென்றிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ, ஒக்டோபர் 05 ஆம் திகதி இரவு மலேசியாவிலிருந்து MH 179 விமானம் மூலம் இலங்கை திரும்பினார்.
இந்நிலையில், ‘சிரிலிய சவிய’ வழக்கு விசாரணைகளில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு கோரி, ஒக்டோபர் 05 ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் அவர் சார்பில் அவரது சட்டத்தரணிகளாலும் முன்பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
May be an image of text
May be an image of text
May be an image of one or more people, cablecar, train and text
அது குறித்து எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி விளக்கமளிக்குமாறு FCID பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இதேவேளை, சிரிலிய நிதி மோசடி தொட்பில் வாக்குமூலம் வழங்க, ஒக்டோபர் 13 ஆம் திகதி ஆஜராகுமாறு பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) நேற்று முன்தினம் (05) ஷிரந்தி ராஜபக்‌ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலைமையிலேயே ஷிரந்தி ராஜபக்‌ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
gs

கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்பு; 1,540 கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள்

October 9, 2026

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூகப் பயணமானது கிராமிய மக்களை நகரங்களுக்கு அழைத்து வராமல், கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி,

tru

இடைத்தேர்தலுக்கு முன் ஈரான் மீது தாக்குதல் இல்லை – ட்ரம்ப்

October 9, 2026

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்பு எந்த நேரத்திலும் அமெரிக்கா ஈரானைத் தாக்காது என அமெரிக்க

chandrasekar

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் இந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு நன்றி – சந்திரசேகர்

October 9, 2026

கச்சத்தீவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கடற்றொழில் நீரியல்

chemmani

செம்மணி 582 மனித எச்சங்கள்; ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் என்ன சொல்லியுள்ளது?

October 9, 2026

யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து 582 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை மற்றும் சர்வதேச தடயவியல் உதவி

pasa

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனாலேயே ராஜபக்‌ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை: – பொதுஜன பெரமுன

October 9, 2026

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாலும் ராஜபக்‌ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை. அவ்வாறிருக்கையில், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை

parliment

ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

October 8, 2026

ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றில் இன்று (8) திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டின் 09 ஆம்

budd

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கு புதிய சட்டம் – ஆராய குழு

October 8, 2026

சிறையில் உள்ள பௌத்த துறவிகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் முறைமைகள் தொடர்பான தற்போதைய

460511f0-c30b-11f1-babe-4199b0e7ccea.jpg

இலக்கியத்திற்கான நோபல் பரிசு கனடா எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு (Anne Carson) அறிவிப்பு!

October 8, 2026

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான புகழ்பெற்ற நோபல் பரிசு, கனடாவைச் சேர்ந்த பிரபல கவிஞரும், கட்டுரையாளரும், மொழிபெயர்ப்பாளருமான ஆன் கார்சனுக்கு

images - 2026-10-08T170815.105

“தவெக ஆட்சி குறித்து விமர்சித்ததாக பரவும் தகவலில் உண்மையில்லை!” – நாஞ்சில் சம்பத் விளக்கம்!

October 8, 2026

சென்னை: தவெக ஆட்சி குறித்துத் தான் விமர்சித்ததாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை எனத்

1200-675-25141697-thumbnail-16x9-priya

“நம்பி வாக்களித்த பெண்களுக்குப் பாதுகாப்பில்லை!” – தவெக அரசை விமர்சித்த மேயர் பிரியா!

October 8, 2026

சென்னை: தவெகவை நம்பி வாக்களித்த பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என சென்னை மேயர் பிரியா திமுக மகளிர் அணி கூட்டத்தில்

1200-675-27344519-thumbnail-16x9-gkvfdd

“எஸ்.ஐ.ஆர் இல்லையென்றால் த.வெ.க அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் பேட்டி!

October 8, 2026

சென்னை: எஸ்.ஐ.ஆர் இல்லை என்றால் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

1200-675-24466243-thumbnail-16x9-cpm

“ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

October 8, 2026

சென்னை: ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்பது மின் வாரியத்தை முழுக்க முழுக்க தனியார் வசம் ஒப்படைக்கின்ற திட்டத்தின் ஒரு பகுதியே