ரஷ்யாவில் படித்த மாணவனுக்கு வைத்திய பீட அனுமதி மறுப்பு?

ரஷ்யாவில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து இலங்கையில் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகுவதற்கான தகுதியைப் பெற்றிருந்த இலங்கை மாணவன் ஒருவரை, உள்நாட்டு மருத்துவ பீடத்தில் இணைத்துக்கொள்வதை மறுத்ததன் ஊடாக அவரது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், குறித்த மாணவனை உடனடியாக இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றின் மருத்துவ பீடத்தில் இணைத்துக்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் நேற்று (05) உத்தரவிட்டுள்ளது.

பொரளையைச் சேர்ந்த இசுல தம்சித் ஜயரத்ன என்ற மாணவரே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரணை செய்த பின்னர், நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் சோபித ராஜகருணா ஆகியோரின் இணக்கப்பாட்டுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர இத்தீர்ப்பை அறிவித்ததாக நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

தான் கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

தனது தந்தை இலங்கை விமானப்படையின் குரூப் கெப்டனாக கடமையாற்றிய போது, ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பதவி கிடைத்ததை அடுத்து தான் ரஷ்யாவிற்குச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

அங்கு இந்திய, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையில் ‘சிரேஷ்ட பாடசாலை சான்றிதழ் பரீட்சையில்’ சித்தியடைந்ததாகவும், அது இலங்கையின் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குச் சமமானது எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

அதன் பின்னர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடாக இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடத்தில் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்த போதிலும், அதற்கான நிபந்தனைகளுக்குத் தான் பொருந்தவில்லை எனக் கூறி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தனது விண்ணப்பத்தை நிராகரித்ததாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர், அரச பல்கலைக்கழகமொன்றின் வைத்திய பீடத்தில் அனுமதி பெறுவதற்கான உரிய நிபந்தனைகளின் கீழ் மனுதாரர் தகுதி பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்தார்.

இவ்விடயத்தில் தலையிடுவதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அதிகாரம் இல்லை எனச் சுட்டிக்காட்டிய நீதியரசர், மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரிக்க அந்த அமைச்சு எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும் குறிப்பிட்டார்.

இதன் மூலம் மனுதாரரின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், குறித்த மாணவனை இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றின் மருத்துவ பீடத்தில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டது.

tab

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மண்டபத்தில் பறிமுதல்

March 4, 2026

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும்

Death-2

பண்டாரவளை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

March 4, 2026

பண்டாரவளை, கடுகஹ லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து புதன்கிழமை (4) அன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார்

Rad

ஒரு பெண் சடலமாகி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இல்லை?

March 4, 2026

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த

nia

நயாகரா பிராந்திய காவல்துறையால் 9-1-1 தொழில்நுட்பம் புதுப்பிப்பு!

March 4, 2026

நயாகரா பிராந்திய காவல்துறை சேவை வழங்குநர்கள் அடுத்த 9-1-1 (NG9-1-1) தலைமுறைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க, 9-1-1 தொழில்நுட்பத்தை புதுப்பித்து

ford

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள்திட்டம் மிக விரைவில் நிறைவு பெறும் – ஒன்டாரியோ முதல்வர்

March 4, 2026

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள் திட்டமிட்ட கால அட்டவணையை விட முன்பே நிறைவு

ne

“ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்” – இஸ்‌ரேல் எச்சரிக்கை

March 4, 2026

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்‌ரேல் எச்சரிக்கை

boa

வலி. வடக்கு ஊரணி மீனவர்கள் இருவர் காணமற் போயுள்ளமை குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை

March 4, 2026

யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம்

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய