ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் – பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது இலங்கை

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அரசாங்க மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜயதிஸ்ஸ, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் (intergovernmental agreements) மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அந்த விஜயத்தின் போது இது குறித்த விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எரிபொருளை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக கொழும்பிலுள்ள ஈரான் தூதுவர் விடுத்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸநலிந்த ஜயதிஸ்ஸ, அந்த அறிக்கையை மதிப்பதாகக் கூறினார். இருப்பினும், சொந்தமாக எண்ணெய் கப்பல்களை  (Tankers) கொண்டுள்ள நாடுகளே இந்தச் சூழலில் பயனடைய முடியும் என்றும்  இலங்கைக்கு தற்போது அந்த வசதி இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் மேலும் விளக்குகையில்:“ரஷ்யாவுடன் அரசாங்க மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. இதற்கு முன்னர் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. ஆனால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் இதைச் செய்ய முடியுமா என்று முயற்சித்து வருகிறோம். ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சரின் வருகை இப்பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் எனவும் தெரிவித்தார்.

pro

மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

March 24, 2026

இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி பொத்துவில் கனகர் கிராம மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (23) முன்னெடுக்கப்பட்டது

vet

மேஜர் ஜெனரல் சில்வா மற்றும் ஆளுநர் வேதநாயகன் விசேட சந்திப்பு

March 24, 2026

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா மற்றும் வட மாகாண ஆளுநர் ந.

arj

அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராக முறைப்பாடு!

March 24, 2026

கிளிநொச்சி பகுதியில் வாழும் மலையக மக்களை கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இழிவாக பேசியதாகக் கூறப்படும் அர்ச்சுனா எம்.பி.க்கு

Gold

ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்த தங்க விலை

March 24, 2026

நாட்டில் இன்று (24) தங்கத்தின் விலை மூன்று முறை அதிகரித்துள்ளதாக இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி,

xa

அமெரிக்க விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு: ஒரு கனடியராக நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால் தெரிந்து கொள்ள வேண்டியவை

March 24, 2026

அமெரிக்க அரசாங்கத்தின் பகுதி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ((TSA) அதிகாரிகளுக்கு உதவியாக குடிவரவு

his

ஹெஸ்புல்லாவுடன் தொடர்பு: வான்கூவர் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை

March 24, 2026

ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பிற்கு நிதி வழங்கும் 100 மில்லியன் டொலர் வலையமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி வான்கூவரைச் சேர்ந்த

nalinda-jayatissa_2025.01

எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

March 24, 2026

தற்போதைய இக்கட்டான சூழலில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்வதற்கு விலை சூத்திரம் பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த

ceb

மீண்டும் மின்வெட்டு

March 24, 2026

மின்சார உற்பத்திக்காக தேவையான எரிபொருள் கிடைக்கப்பெறுவதனால் இதுவரை மின்வெட்டு மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு

rea

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற முறைமைக்கு எதிர்ப்பு; ஆசிரியர்கள் போராட்டம்

March 24, 2026

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8

phil

எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் நாடு

March 24, 2026

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதலைத் தொடர்ந்து, தேசிய அளவிலான எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடாக

ca

கனடாவுக்கு அனுப்புவதாக நடந்த பாரிய நிதி மோசடி

March 24, 2026

முழு குடும்பத்தையும் கனடாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒரு கோடியே 58 லட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ்,

fi

அமெரிக்காவில் நீதிமன்றக் கட்டிடத்தில் தீ விபத்து

March 24, 2026

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், பிளாய்ட் கவுண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டடத்தில் திங்கள்கிழமை (23) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.