ரணில், விஜயதாஸவை நேரில் சந்திப்பு

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வாரம் விஜயதாஸ ராஜபக்ஷவின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ (Sunday Times) பத்திரிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களுடன் விஜயதாஸ ராஜபக்ஷவின் இல்லத்திற்குச் சென்ற விக்ரமசிங்க, அவரது நலன் குறித்து விசாரித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘சண்டே டைம்ஸ்’ அறிக்கையின்படி, தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நடூன் சிந்தக்க விக்ரமரத்ன எனப்படும் ‘ஹரக் கட்டா’ கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட விவகாரத்தில் முறையான சட்ட வழிமுறைகளே பின்பற்றப்பட்டதாக அங்கு கூடியிருந்தவர்களிடம் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அக்காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த தான், ‘ஹரக் கட்டா’ தொடர்பான ஆவணங்கள் உட்பட அனைத்துப் பொருத்தமான ஆவணங்களையும் தனது ஒப்புதலுக்காக ஜனாதிபதி செயலகத்திற்குச் சமர்ப்பித்திருந்ததாகக் குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி, இந்த விவகாரத்தில் எந்தவொரு தனிநபரும் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘ஹரக் கட்டா’வை விஜயதாஸ ராஜபக்ஷ தவறான முறையில் பாதுகாத்தார் என்ற குற்றச்சாட்டுகளையும் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார். அரச காவலில் உள்ள ஒரு நபரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோருவது, கைதிகளைப் பாதுகாப்பதற்கும் மனித உரிமைப் பொறுப்புகளுக்கு இணங்குவதற்கும் அரசாங்கத்திற்குள்ள பொறுப்புடன் ஒத்துப்போகும் ஒரு விடயமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கொன்றில் செல்வாக்கு செலுத்துவதற்காகப் பணம் கோரப்பட்டதாகக் கூறப்படும் காலப்பகுதியில், விஜயதாஸ ராஜபக்ஷவும் அவரது மகனும் டுபாயில் தங்கியிருந்தமை தெரியவந்ததை அடுத்து, தற்போது விஜயதாஸ ராஜபக்ஷவிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த வார தொடக்கத்தில் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தது.

முன்னாள் அமைச்சரும் அவரது மகனும் ஒரே நேரத்தில் டுபாயில் தங்கியிருந்தமைக்கும், குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த சட்டவிரோதச் செயலுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதைத் கண்டறிய புலனாய்வாளர்கள் முயன்று வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

bom

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

September 13, 2026

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்

pa

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

September 13, 2026

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து

thal

தலைமன்னார் கடலில் மணல்மேட்டில் வழிதவறியவரை மீட்ட கடற்படையினர்

September 13, 2026

இலங்கை கடற்படையினர் தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடலில் மணல்மேட்டில் வழிதவறிய நபர் ஒருவரை மீட்டதுடன், அந்த நபருக்கு தேவையான மனிதநேய

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை

1291252

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? – ‘துக்ளக் தர்பார்’ முடிவைக் கைவிடச் சீமான் கடும் கண்டனம்!

September 12, 2026

சென்னை: ரூ. 1,200 கோடியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட