யுத்த நிலைமையால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளுக்கு தீ்ர்வுகாண எந்த முன் ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளுக்கு தீ்ர்வுகாண எந்த முன் ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை. அரசாங்கத்திடம் எந்த முகாமைத்துவமும் இல்லாமையே நெருக்கடிக்கு காரணமாகும். அதனால் அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்க தவறினால் நீண்டகாலம் செல்ல முன்னர் மக்கள் வீதிக்கிறங்குவதை தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்ற மக்கள் சந்தி்பாென்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

மத்திய கிழக்கு யுத்தம் கடந்த மாதம் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஜனவரி மாதம் 26ஆம் திகதி அமெரிக்கா யுத்தத்துக்கான தயார் படுத்தல்களை மேற்கொள்ள ஆரம்பித்தது.

அந்த காலப்பகுதியிலேயே இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்து, எமது தேவையான எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்.

யுத்தம் ஒன்று ஏற்பட்டால் அதற்கு எமது நாடு முகம்கொடுக்க முடியுமான தயார் படுத்தல்களை மேற்கொள்ளுமாறும் தெரிவித்திருந்தார்.

ஆனால் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு சில தினங்களில், அதாவது 3ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு வந்த ஜனாதிபதி, எமக்கு தேவையான எரிபொருள் 40 நாட்களுக்கு போதுமான அளவு இருப்பதாக தெரிவி்தார்.

அதேநேரம் எமக்கு தேவையான எரிபொருள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்வரை இப்பதாக வெளிவிவகார அமைச்சர் லிஜித்த ஹேரத் தெரிவித்திருந்தார்.

அவ்வாறு இருக்கையில் எரிபொருள் சூத்திரத்திற்க்கு மாற்றமாக அரசாங்கம் இந்த மாதம் இரண்டு தடவைகள் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.

அரசாங்கத்தால் முகாமைத்துவம் செய்ய முடியாமலே இவ்வாறு விலை அதிகரிப்பு மேற்கொண்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை பார்க்கும்போது துறைமுகத்தில் எரிபொருள் இறக்குமதி செய்யும்போதேல்லாம் நாட்டில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் நிலையே இருக்கிறது.

அத்துடன் இந்த காலப்பகுதியில் ஒரு எரிபொருள் கப்பலைக்கூட அரசாங்கத்துக்கு கொண்டுவர முடியாமல்போயிருக்கிறது. தனியார் நிறுவனங்கள் கொண்டுவரும் எரிபொருளே நாட்டில் இருக்கிறது.

அரசாங்கத்துக்கு முடியாது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. அரசாங்கத்துக்கு அனுபவமில்லை. இராஜதந்திர தொடர்புகள் இல்லை. நெருக்கடி நிலைமை ஒன்று ஏற்படும்போது, உலக நாடுகளுடன் கலந்துரையாடி அதனை சமாலிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே நாட்டு தலைலரின் பொறுப்பு. ஆனால் அதனை செய்ய ஜனாதிபதி தவறியுள்ளார்.

அதேநேரம் இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது, நாட்டில் ஏற்படுகின்ற அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு சொன்னார்கள். தீர்வுக்கான வழிகளையும் தெரிவித்தார்கள்.

அதனாலே மக்கள் இவர்களுக்கு அதிகாரத்தை வழங்கினார்கள். ஆனால் இன்று எதனையும் காணக்கூடியதாக இல்லை. வெறும் வாய்ப்பேச்சு மாத்திரமே இருக்கிறது.

துறைமுகத்தில இறக்கும் விலைக்கு எரிபொருட்களை விற்பனை செய்யலாம் என்றே தெரிவித்தார்கள். ஆனால் அரசாங்கம் கையடிருப்பில் வைத்திருந்த எரிபொருட்களுக்கே விலை அதிகரித்தது. அதனால் அரசாங்கத்துக்கு 700 பில்லியன் ரூபாவரை லாபம் கிடைத்துள்ளது.

திறைசேரி நிரம்பி வழிவதாக போதுமானளவு டொலர் இருப்பதாகவும் அரசாங்கம் தெரிவிக்கிறது. அப்படியானால், இந்த விலை அதிகரிப்புகளால் மக்கள் அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்காக கஷ்டப்படும் நிலையில், மக்களுக்கு ஏன் நிவாரணம் வழங்க முடியாமல் இருக்கிறது.? திறைசேரி எவ்வாறு நிரம்பியது என்பதை இவர்கள் தெரிவிப்பதில்லை.

2023இல் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்து மக்கள் மீது விதித்த வரிகளே இதற்கு காரணமாகும். இந்த வரிகளை இல்லாமலாக்குவதாக ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின்போது தெரிவித்திருந்தார். ஆனால் அந்த வரியையும் நீக்கவில்லை. மக்களிடமிருந்து பெறப்படும் வரி பணமே திறைசேரி நிரம்ப காரணமாகும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது, அதற்கு தீர்வுகாண நடைமுறை வேலைத்திட்டம் எதுவும் அந்த அரசாங்கத்திடம் இருக்கவில்லை. அதனாலே மக்கள் வீதிக்கிறங்கினார்கள்.

எனவே மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண நடைமுறை வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லை. அதனால் அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் மக்கள் வீதிக்கிறங்குவதை தடுக்க முடியாமல்போகும் என்றார்.

Anu

மிக மிக விரைவாக போதைப் பொருளை அழிக்க எதிர்பார்க்கிறோம்!

March 25, 2026

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்புக்களை விரைவாக அழிக்கும் பணிகளுக்கு நிலவும் சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட

air

தொடரும் போர்; எரிபொருள் விலை அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பெரும் பாதிப்பு

March 25, 2026

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக் குறிப்பிட்டு, சில உள்நாட்டுச் சேவைகள் மற்றும் அவுஸ்திரேலியா

Poth

அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக பேரணி

March 25, 2026

தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக, எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் எதிர்ப்புப்

chi

கோழி இறைச்சி, முட்டை விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

March 25, 2026

எரிபொருள் விலை உயர்வால், ஒரு முட்டையின் விலை 40 ரூபாயாகவும், தோலுடன் கூடிய ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை

ele

வடமராட்சி கிழக்கு கேவில் பகுதிக்குள் கொண்டு வரப்பட்ட யானைகளால் மக்கள் அவதி

March 25, 2026

வடமராட்சி கிழக்கு கேவில் பகுதிக்கு யானைகளை திட்டமிட்டு கொண்டுவந்து விட்டுள்ளனர் என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். யானைகள் பெரும்

vel

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக பதவியேற்றார் பேராசிரியர் வேல்நம்பி

March 25, 2026

உயர்பட்டப் படிப்புகள் பீடப் பீடாதிப தியாக விளங்கிய சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி திருநாவுக்கரசு வேல்நம்பி (B.Com, M.A. யாழ்ப்பாணம் M.,

Amar

தோல்வியுற்ற கொள்கைகளால் பாதிக்கப்பட்ட கனடா – பிரம்ப்டன் நகர வாகனத் துறையை மீட்க கன்சர்வேட்டிவ் கட்சி புதுத்திட்டம் வகுப்பு!

March 25, 2026

லிபரல் கட்சியின் தோல்வியுற்ற கொள்கைகள் கனடாவின் வாகனத் துறையை பெருமளவில் பாதித்து வருகின்றன. 2015-ஆம் ஆண்டு முதல், கனடாவின் வாகன

ALka

ஈரானின் புதிய உச்ச தலைவர் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறார் – இஸ்ரேலிய ஊடகம் செய்தி

March 25, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறார் என இஸ்ரேலிய ஊடகமான யெடியோத்

leb

‘விரும்பத் தகாத நபர்’; லெபனானுக்கான ஈரான் தூதுவரை வெளியேறுமாறு உத்தரவு

March 25, 2026

லெபனானுக்கான ஈரான் தூதுவரை ‘விரும்பத் தகாத நபர்’ என அறிவித்துள்ள லெபனான் அரசாங்கம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் அவரை நாட்டை

arrest

எரிபொருள் சட்டவிரோத விற்பனை; பவுசருடன் ஒருவர் கைது

March 25, 2026

பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில், சட்டவிரோதமான முறையில் எரிபொருள் பவுசர் ஒன்றையும் அதிகளவிலான எரிபொருளையும் தன்வசம் வைத்திருந்த வர்த்தகர்

Elec

மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை

March 25, 2026

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரப்

Court

நீதிமன்ற வளாகத்திற்குள் பெண்ணொருவர் குத்திக் கொலை!

March 25, 2026

குருணாகல், கல்கமுவ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் வளாகத்திற்கு முன்பாக 37 வயதான பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.