யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கணிதவியல் பேரா
சிரியர் சிவக்கொழுந்து சிறி சற்குணராஜா, கடந்த 2020ஆம்
ஆண்டிலிருந்து வகித்த துணைவேந்தர் பதவியில் இருந்து நேற்றுடன்
விடை பெற்று சென்றுள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் 2023
ஓகஸ்ட் 28 வரை தனது முதலாவது பதவிக் காலத்தையும், 2023
ஓகஸ்ட் முதல் நேற்று 2026 மார்ச் 24 வரை இரண்டாவது
பதவிக் காலத்திலும் துணைவேந்தராகப் பதவி வகித்த பேரா
சிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று மார்ச் 25 ஆம்
திகதி தனது 65 ஆவது அகவையை நிறைவு செய்து 66 ஆவது
அகவைக்குள் காலடி பதிக்கிறார்.