இணையவழிக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நல்லூர் பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்ட குடிசார் சம்மேளனம் மற்றும் யாழ்மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு என்பன இணைந்து இச்செயலமர்வை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் இணையவழிக் குற்றங்களை அடையாளம் காணும் திறன் பாதுகாப்பான இணையப் பயன்பாட்டு நடைமுறைகள் இளைஞர்களின் உரிமைகள் மற்றும் சட்ட ரீதியான பாதுகாப்பு முறைப்பாடு செய்யும் நடைமுறைகள் மற்றும் இணைய வழிக் குற்றத்தடுப்புப் பிரிவின் பங்கு போன்ற விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேசசெயலக கிராம உத்தியோகத்தர்கள் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றியதுடன் வளவாளராக இணைய வழிக் குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் தனுஷன் கலந்துகொண்டார்.