மொரட்டுவையில் அமைந்துள்ள சொய்சாபுர வீட்டுத் திட்டத்தின் ‘C’ பிரிவில் (Block ‘C’) இன்று (23) இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தீயில் சிக்கியதை அடுத்து, உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மொரட்டுவை தீயணைப்புப் பிரிவு சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்ததுடன், தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், எரிவாயுக் கசிவே தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது