மையவாடி கடலரிப்பில் மீண்டும் மனித எச்சங்கள் கண்டெடுப்பு

இம்மையவாடியில் மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது மக்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியான கடலரிப்பு காரணமாக மனித எச்சங்கள் தொடர்ச்சியாக வெளிப்பட ஆரம்பித்துள்ளன.

இது தொடர்பான தகவல்கள் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர் போன்ற அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் இடைவிடாது 4 நாட்களாக கனரக வாகனங்களின் உதவியுடன் கல் அணைகளை தற்காலிகமாக செய்து முடித்ததுடன் அப்பகுதி மக்களது பாராட்டையும் பெற்றுள்ளார்.

கடந்த காலங்களில் இம்மையவாடி இவ்வாறு கடலரிப்பிற்கு உள்ளான போதிலும் நிரந்தர தீர்வு எதுவும் மேற்கொள்ள முடியாதமையினால் தற்போது இவ்வாறான நிலைமை தோன்றி உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக தடுப்பு அணைகளையும் தாண்டி கடலரிப்பு நிலை இங்கு உருவாகியிருப்பதால் ஆபத்தான நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் பல எலும்புக்கூடு பகுதிகள் கபூர் தடயங்கள் மற்றும் மனித எச்சங்களாக கருதப்படும் பொருள்கள் கரையோரத்தில் சிதறிக் காணப்படுகின்றன.

இது தவிர மையவாடிக்கு அண்மையில் உள்ள விநாயகர் ஆலயம், காரைதீவு கரையோர பாதுகாப்பு காரியாலயம் போன்றன கடலரிப்புக்கு இலக்காகி உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அரச அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Gramajo

டொராண்டோ கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் மொன்றியலில் கைது!

March 6, 2026

டந்த வருடம் ஜூலை மாதம் டொராண்டோவில் இடம்பெற்ற கொலைக் குற்றத்துடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த 24 வயதுடைய பிரையன் ஃபுவென்டெஸ்

Gramajo

டொராண்டோ கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் மொன்றியலில் கைது!

March 6, 2026

டந்த வருடம் ஜூலை மாதம் டொராண்டோவில் இடம்பெற்ற கொலைக் குற்றத்துடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த 24 வயதுடைய பிரையன் ஃபுவென்டெஸ்

sss

கனேடிய சுற்றுலாப் பயணி அவுஸ்திரேலியாவில் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

March 6, 2026

அஸ்திரேலியாவில் ஜனவரியில் உயிரிழந்த கனேடிய சுற்றுலாப் பயணி, டிங்கோ தாக்குதலால் ஏற்பட்ட காயங்களுக்குப் பிறகே நீரில் மூழ்கி இறந்ததாக செய்திகள்

saroja

மாத்தறையில் சர்வதேச மகளிர் தினம் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

March 6, 2026

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் மாத்தறையில் இடம்பெறவுள்ளது. அரசியலில்

jeevan

உயிரிழந்த இளம்பெண் உடல் துஷ்பிரயோகம்: அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும்

March 6, 2026

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச வைத்தியசாலையொன்றில் உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த

don

அடுத்த கட்டத்தை நோக்கி ஈரானுக்கு எதிரான போர்…

March 6, 2026

ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை அமைப்புகளைக் குறிவைத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி

e

உயர்தர தொழிற்கல்விப் பிரிவுக்கு விண்ணப்பங்கள் கோரல்

March 6, 2026

2026/2027 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் தர தொழிற்கல்விப் பிரிவு பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி,

ship

உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு

March 6, 2026

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேலிய படைகளுக்கிடையில் தீவிரமடைந்து வரும் போர் காரணமாக, உலகளாவிய ரீதியில் கப்பல்

suz

கடலில் காணாமல் போனோரை தேடும் பணி முன்னெடுப்பு

March 6, 2026

யாழில் கடலில் காணாமல் போனோரை தேடும் பணியில் சுழியோடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், பாலைதீவு திருவிழாவுக்கு ,இன்று

bri

பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டம்

March 6, 2026

தஞ்சம் கோரி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட குடும்பங்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு £40,000 வரை நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக உள்துறைச் செயலாளர்

gaze

மின்சார சபை மறுசீரமைப்புக்கான வர்த்தமானி வௌியீடு

March 6, 2026

இலங்கை மின்சார சபையின் பணிகள் மற்றும் கடமைகளை மறுசீரமைத்து, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று

id

இந்தியா – ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்ய அனுமதி

March 6, 2026

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில், அமெரிக்கா இந்தியாவிற்கு 30 நாட்கள்