முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு வினைத்திறனான சேவை; விசேட மாநாடு

முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு அரச நிர்வாகத்தின் மூலம் மிகவும் வினைத்திறனான மற்றும் துரிதமான சேவையை வழங்குவதை இலக்காகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மாவட்ட பிரதேச செயலாளர்கள் மாநாடு வியாழக்கிழமை (26) துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் காலை 8:30 மணியளவில் இம்மாநாடு ஆரம்பமானது. மாநாட்டிற்கு முன்னதாக, துணுக்காய் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர், செயலகத்தின் அலுவலகச் செயற்பாடுகள் மற்றும் கோப்புப் பராமரிப்பு முறைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மாவட்டத்தின் தற்போதைய சவால்கள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டது:

எரிபொருள் நெருக்கடியும் மேலாண்மையும்: உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் மாவட்டத்தில் எழுந்துள்ள நெருக்கடி நிலைமைகள் மற்றும் அரச செலவினக் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அனர்த்த நிவாரணப் பணிகள்: அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் மற்றும் நஷ்டஈடு வழங்கும் பணிகள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.

அபிவிருத்தித் திட்டங்கள்: 2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகள், குறிப்பாக கிராமிய வீதி அபிவிருத்தி மற்றும் சமூக நலத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
நிர்வாகச் சவால்கள்: பிரதேச செயலகங்கள் எதிர்நோக்கும் நிதி மற்றும் திட்டமிடல் ரீதியான சவால்கள், 2026 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்துதல் மற்றும் வெலிஓயா பிரதேசத்தின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

துணுக்காய் பிரதேச செயலாளர் இ. ரமேஷின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) திருமதி எஸ். மஞ்சுளாதேவி, மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்டப் பிரதம கணக்காளர், மாவட்டப் பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் மற்றும் மாவட்ட நலன்புரிச் சபையின் இணைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், ஒட்டுசுட்டான் மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய பிரிவுகளின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

Prive bus

வயிற்றில் போதைப்பொருள் பாக்கெட் வெடித்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் பேருந்து நடத்துனர் மரணம்

June 11, 2026

தங்காலை மற்றும் மாகும்புர இடையே தக்ஷிண அதிவேக நெடுஞ்சாலையில் (Southern Expressway) பயணிக்கும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்றில் பணிபுரிந்த

722605460_1539455320926522_1841709349141582383_n

பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும். – யாழில் இலங்கை ஆசிரியர் சங்கம் சுவரொட்டி

June 11, 2026

ஆளுநரின் அரசியல் தலையீட்டால் சுயாதீனத்தை இழந்து முறைகேடுகளை செய்யும் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும்” என குறிப்பிடப்பட்டு இலங்கை

El ni

காலநிலை மாற்றம்; எல் நினோவால் இலங்கைக்கு ஆபத்தா?

June 11, 2026

எதிர்பார்க்கப்படும் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றம், கணிக்கப்பட்டதைப் போலவே இலங்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால், குடிநீர் தேவையைப் பூர்த்தி

naina

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

June 11, 2026

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம்

parliment

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் உரிய விசாரணை- பிரதி சுகாதார அமைச்சர்

June 11, 2026

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி

720571922_3539434372901910_1636371394617666931_n

அம்மா, நான் அவரைப் பயமுறுத்தவே இவ்வாறு செய்தேன், சாவதற்காக அல்ல”

June 11, 2026

களுத்துறை மாவட்டம், மீவனபாலான பகுதியில் இடம்பெற்ற துயரச் சம்பவமொன்று ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 25 வயதுடைய ஷானிகா செவ்வந்தி

Walk-1

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

June 11, 2026

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால்

makkas

தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு உண்மைகளை வெளிப்படுத்திய ஜீவந்த பீரிஸின் கருத்தை வரவேற்கிறோம் – அருட்தந்தை மாக்கஸ் அடிகளார்

June 11, 2026

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வரலாற்றில் நடந்த அனைத்தும் இன அழிப்பு என்றும், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு

sun

தற்போதைய நிர்வாகத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம்; செல்வாக்கால் தப்ப முடியாது

June 11, 2026

கடந்த காலங்களைப் போலன்றி, தற்போதைய நிர்வாகத்தில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட்டு வருவதுடன், செல்வாக்கு அல்லது அரசியல் அதிகாரம் கொண்ட

kaj

மீனவர் குடும்பங்களை கொக்கிளாயில் நிரந்தரமாக குடியேற்ற அனுமதிக்க முடியாது!

June 11, 2026

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நீர்கொழும்பு உள்ளிட்ட ஏனைய வௌியிடங்களில் இருந்து காலத்திற்கு காலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வந்து செல்லும் 244 மீனவர்

KXQH3VQHQ565YO7OI3PWRRR3JU

ஈஸ்ட் வில்லேஜில் கத்திக்குத்துச் சம்பவம்: சந்தேக நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

June 11, 2026

கால்கரி (Calgary) நகரின் ஈஸ்ட் வில்லேஜ் பகுதியில் நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் ஒருவரைப் போலீஸார் தீவிரமாகக்

trump june 26

கனடாவிடம் உள்ள எதுவும் நமக்குத் தேவையில்லை:’ வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க விருப்பமில்லை என டிரம்ப் அதிரடி

June 11, 2026

கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான இலவச வர்த்தக ஒப்பந்தமான ‘கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தம்’ (CUSMA /