மீட்கப்பட்ட படகில் 10 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள்!

இன்று காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் தொகையின் மதிப்பு சுமார் 10 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் மற்றும் நவீன ஆயுதங்கள் கடத்தப்பட்ட இரண்டு பலநாள் மீன்பிடி படகுகள் இன்று (12) திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

கடற்படையின் நீண்டதூர தேடுதல் கப்பல்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது, 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு படகிலிருந்து சுமார் 600 கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய ​ஹேரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், போதைப்பொருட்களுடன் அதே படகிலிருந்து 08 கைத்துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்கான மெகசின்கள் , 02 T56 ரக துப்பாக்கிகள், 01 M16 ரக துப்பாக்கி. ( M16 ரக துப்பாக்கியானது பாதுகாப்புப் படையின் விசேட பிரிவினரால் மாத்திரம் பயன்படுத்தப்படும் ஒரு நவீன ஆயுதமாகும்) ஆகிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மற்றைய பலநாள் மீன்பிடி படகு, போதைப்பொருள் கடத்தப்பட்ட படகிற்கு உதவியாகவும் உளவு பார்ப்பதற்காகவும் வந்திருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.

jeya

எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

March 12, 2026

மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர், குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த மாதம் 18ஆம் திகதி சபாநாயகரிடம்

ddds

யாழில் 6 பேருக்கு திறந்த பிடியாணை உத்தரவு!

March 12, 2026

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் வழக்கு தவணைகளின் போது தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முற்படாத பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களுக்கு

vima

இலங்கைக்கு அவசரமாக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தேவை

March 12, 2026

இலங்கைக்கு அவசரமாக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தேவைப்படுவதாக முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

moj

கொல்லப்பட்ட ஈரானியர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்க ஈரான் தயங்காது

March 12, 2026

மெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானியர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்க ஈரான் தயங்காது என்று ஈரானின் புதிய அதியுச்ச தலைவர்

jaf

சட்டவிரோத இலத்திரனியல் உபகரணங்கள் யாழில் மீட்பு!

March 12, 2026

யாழ்ப்பாணத்தில் இரண்டு கடைகளில் இருந்து சட்டவிரோத இலத்திரனியல் உபகரணங்கள் மீட்கப்பட்டன. இந்த நடவடிக்கை இன்று(12.03.2026) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து

b

நாட்டில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

March 12, 2026

அடுத்த மாதம் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக பேருந்து சேவையை ஆரம்பிக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த

jud

மேல்நீதிமன்ற நீதிபதியை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை?

March 12, 2026

தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றமுறையான அச்சுறுத்தல் மற்றும் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட அம்பாறை மேல் நீதிமன்ற

death-pictures-4i5d2eg6pdb913xl

அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி ஒருவர் பலி

March 12, 2026

பிலியந்தலை, கொரகபிட்டிய பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் அச்சகம் ஒன்றில் பணியாற்றி வந்த இயந்திர இயக்குநர் ஒருவர், அங்குள்ள அச்சு

fr

மண்கும்பானில் பிரான்ஸ் நாட்டவர்கள் இருவர் உட்பட ஐவர் விபத்தில் படுகாயம்

March 12, 2026

யாழ்ப்பாணம், மண்கும்பான் பகுதியில் கார் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில், இலங்கைக்குச் சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள்

sc

பாடசாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதி மாணவன் பலி

March 12, 2026

கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவரின் வாகனத்தில் சிக்கி, அதே பாடசாலையில்

CEB

இம்மாத இறுதியில் மின் கட்டண அதிகரிப்பு?

March 12, 2026

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முடிவு இம்மாத

fue

இந்தியாவிடம் இருந்து எரிபொருள் கோரிக்கை

March 12, 2026

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது