கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு விசாரணை நடைபெற்று வரும் இந்தவேளையில் பொதுமக்களின் உதவியை காவல் துறையினர் கோருகின்றனர்.
38 வயதுடைய மெஸ்கான் ஐனி (Mezhgan Aini) அல்லது “சாரா” (Sarah) என்ற பெயர்களாலும் அறியப்பட்டவர், மிசிசாகாவில் உள்ள குயின் ஃப்ரெடெரிகா டிரைவ் (Queen Frederica Drive) மற்றும் டண்டாஸ் ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Dundas Street East) பகுதிகளில் வசித்து வந்தார். அவர் கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இருந்ததாக அறியப்பட்டார். ஆப்கானிஸ்தானில் உள்ள அவரது குடும்பத்தினர் நீண்டகாலமாக அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் இருந்ததையடுத்து, 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பீல் பிராந்திய காவல் துறைக்கு அவர் காணாமல் போனதாக புகார் அளித்தனர்.
தற்போது பீல் பிராந்திய காவல் துறை மெஸ்கான் ஐனி காணாமற்போன விவகாரத்தை கொலை வழக்காக விசாரித்து வருகிறது.
2022 ஜூன் மாதம் முதல் 2022 செப்டம்பர் மாதம் வரை அவரது இல்லம் அமைந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளை கவனித்தவர்கள், இதுவரை காவல் துறையுடன் பேசாதவர்கள், அல்லது மெஸ்கான் ஐனி அல்லது அவரது குடும்பத்தைப் பற்றிய தகவல் உடையவர்கள் விசாரணைகளுக்கு முன்வருமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.
தகவல் கொண்டவர்கள் கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவை 905-453-2121, ext. 3205 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். அத்துடன், பெயர் வெளியிடாமல் தகவல் வழங்க விரும்புவோர் Peel Crime Stoppers-ஐ 1-800-222-TIPS (8477) என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது peelcrimestoppers.ca இணையதளம் வழியாக தகவல் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.