மாநகர சபையில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து அறிவிக்க சந்தர்ப்பம்

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளையும் தகவல்களையும் கோரத் தொடங்கியுள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள், குற்றவியல் நம்பிக்கை துரோகம், அதிகாரம் மற்றும் அரச வளங்களைத் துஷ்பிரயோகம் செய்தல், சட்டவிரோத ஆட்சேர்ப்புக்கள் மற்றும் கொள்முதல் விதிமீறல்கள் தொடர்பில் அந்த ஆணைக்குழு விசாரிக்கவுள்ளது.

அத்துடன் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவதில் இடம்பெற்ற முறைகேடுகள், முறையான நடைமுறைகளை மீறி முன்னெடுக்கப்பட்ட வழக்குகள் மற்றும் இணக்கப்பாடுகள், இவற்றின் மூலம் அரசாங்கத்தின் வருமானத்திற்கு ஏற்பட்ட பாரிய நட்டங்கள் என்பன குறித்தும் இதன்போது விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி அநுர குமர திசாநாயக்கவினால், 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் கீழ், கடந்த 2025 டிசம்பர் 30 ஆம் திகதியிடப்பட்ட 2469/08 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சட்டத்தரணி பியசேன ரணசிங்க தலைமையிலான இந்த ஆணைக்குழுவில் ஈ.ஆர்.எம்.எஸ்.எச். ஏக்கநாயக்க (இலங்கை கணக்காளர் சேவை – தரம் 1), டி.எஸ். விக்ரமசிங்க (ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆணைக்குழு தனது முதலாவது இடைக்கால அறிக்கையை 3 மாதங்களுக்குள்ளும், இறுதி அறிக்கையை 6 மாதங்களுக்குள்ளும் ஜனாதிபதி செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தனிநபர்கள் அல்லது அமைப்புகள் தமது எழுத்துமூலமான முறைப்பாடுகளைச் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பலாம்.

செயலாளர், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, இலக்கம் 152, காலி வீதி, கொழும்பு 03.

முறைப்பாடுகள் அனைத்தும் 2026 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முறைப்பாட்டாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.

தமது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாதவர்கள் அதனைக் கோர முடியும்.

வாய்மூலமாகத் தகவல்களை வழங்க விரும்புவோர் 011 2 301 735 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து பெப்ரவரி 23 ஆம் திகதிக்கு முன்னர் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலை எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்

asar

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணி மீட்பு!

March 4, 2026

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணியை நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீட்டுத் தந்தமைக்காக, வாகரை பிரதேச செயலாளருக்கு வாகரை

ship

இலங்கையில் ஈரானிய போர்க்கப்பலை நாமே தாக்கினோம் – அமெரிக்கா

March 4, 2026

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதன் விளைவாகவே இலங்கைக் கடற்படை ஈரானிய மாலுமிகளை

tab

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மண்டபத்தில் பறிமுதல்

March 4, 2026

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும்

Death-2

பண்டாரவளை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

March 4, 2026

பண்டாரவளை, கடுகஹ லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து புதன்கிழமை (4) அன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார்

Rad

ஒரு பெண் சடலமாகி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இல்லை?

March 4, 2026

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த

nia

நயாகரா பிராந்திய காவல்துறையால் 9-1-1 தொழில்நுட்பம் புதுப்பிப்பு!

March 4, 2026

நயாகரா பிராந்திய காவல்துறை சேவை வழங்குநர்கள் அடுத்த 9-1-1 (NG9-1-1) தலைமுறைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க, 9-1-1 தொழில்நுட்பத்தை புதுப்பித்து

ford

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள்திட்டம் மிக விரைவில் நிறைவு பெறும் – ஒன்டாரியோ முதல்வர்

March 4, 2026

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள் திட்டமிட்ட கால அட்டவணையை விட முன்பே நிறைவு

ne

“ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்” – இஸ்‌ரேல் எச்சரிக்கை

March 4, 2026

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்‌ரேல் எச்சரிக்கை