மாத்தறையில் சர்வதேச மகளிர் தினம் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் மாத்தறையில் இடம்பெறவுள்ளது. அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும். பெண்கள் வெறும் வாக்காளர்களாக மட்டும் இருக்காமல், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொண்டு சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆளுமை செலுத்த முன்வர வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (5) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பெண்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியப் பிரச்சினையான வீட்டு வன்முறை காணப்படுகிறது. பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளையும் வன்முறைகளையும் சகித்துக்கொண்டு முடங்கிப் போய்விடக் கூடாது. குறிப்பாக, 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க வீட்டு வன்முறைத் தடுப்புச் சட்டம் குறித்தும், பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் ஏனைய சட்டப் பிரிவுகள் குறித்தும் பெண்கள் போதிய விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும்.

எமது அரசாங்கத்தின் கீழ் வீட்டு வன்முறைக்கு உள்ளாகும் பெண்களுக்கென விசேட ஆலோசனை மையங்கள் 11 மாவட்டங்களில் நிறுவப்பட்டன. அண்மையில் நுவரெலியா மாவட்டத்திலும் ஒரு மையம் திறந்து வைக்கப்பட்டது. இவற்றின் மூலம் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மனவள ஆலோசனை வழங்கப்படுவதோடு, சுயதொழில் ஊக்குவிப்பு திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

பல பெண்கள் தங்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு இருப்பதே தெரியாமல் வன்முறைகளை அனுபவித்து வருகின்றனர். பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் தயக்கமின்றி பொலிஸ் நிலையங்களில் உள்ள சிறுவர் மற்றும் மகளிர் பிரிவை அணுகி சட்ட உதவியைப் பெற வேண்டும். ஒரு பெண் பொருளாதார ரீதியாகத் தனித்து இயங்கும் பலத்தைப் பெறும்போதுதான் அவரால் வன்முறைகளிலிருந்து விடுபட முடியும். இதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சுயதொழில் கடன் திட்டங்கள், சிறு தொழில் முயற்சி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பெண்களை மையமாகக் கொண்ட வாழ்வாதார உதவிகள் எமது அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் வழங்கப்படும் குறைந்த வட்டி வீதத்திலான கடன் வசதிகளைப் பெண்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்கள் தையல் கலை, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விவசாயம் சார்ந்த சிறு தொழில்களில் ஈடுபட்டுத் தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள முடியும். வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான பிரத்தியே திட்டங்கள் பலவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

சட்ட ரீதியான விழிப்புணர்வும் பொருளாதாரச் சுதந்திரமும் இணையும்போதுதான் பெண்களால் உண்மையான சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மகளிர் தினம் என்பது வெறும் கொண்டாட்டமாக மட்டும் முடிந்துவிடாமல், பெண்களின் உண்மையான விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் வழிவகுக்கும் ஒரு தொடக்கமாக இருக்க வேண்டும் என்றார்.

sa

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அடக்குமுறை நடந்திருந்தால் ஆதாரத்தை முன்வையுங்கள்!

March 7, 2026

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், அதன் மூலம் ஏதேனும் அடக்குமுறைகள் இடம்பெற்றிருந்தால் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு பிரதமர்ஹரிணி

au

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் சடலமாக மீட்பு

March 7, 2026

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள லொட்ரோப் பகுதியில், உள்ள வீட்டில் இலங்கைப் பெண் உட்பட தம்பதி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள்

drone

நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பு

March 7, 2026

ட்ரோன்களை (Drone)பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான உணர்திறன் மிக்க தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைத்

ba

பாகிஸ்தான் தொடரிலிருந்து பங்களாதேஷ் முக்கிய வீரர்கள் விலகல்?

March 7, 2026

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியை அந்நாட்டு

crim

நாட்டு துப்பாக்கி வெடித்து இளைஞர் படுகாயம்; மல்லாவியில் சம்வம்

March 7, 2026

சட்டவிரோதமாக உடமையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞர் ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (06.03.2026)

photo-collage.png (51)

இலங்கை விமானப்படையின் 75ஆம் ஆண்டு விழா

March 7, 2026

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் நேற்று

us

இலங்கையில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு

March 7, 2026

இலங்கையில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையம் வழக்கம்

jap

கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார் ஜப்பானிய கப்பலின் பணியாளர்

March 7, 2026

கொழும்புக்கு அப்பாலுள்ள மேற்கு கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையினருக்குச் சொந்தமான “JMSDF ONAMI” கப்பலில், மருத்துவ சிகிச்சை

sr

சுற்றுலாத்துறை குறித்து பரப்பப்படும் போலிச் செய்திகள்!

March 7, 2026

வுஸ்திரேலியர்களுக்கு இலங்கை ஒரு அதிக அபாயகரமான சுற்றுலாத் தலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது. இலங்கைக்கான

ali ka

ஈரான் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியைப் படுகொலை செய்த பின்னணி

March 7, 2026

ஈரான் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியைப் படுகொலை செய்வதற்கான திட்டத்தைத் தீட்டியபோது, இஸ்ரேல் எவ்வாறு தெஹ்ரானின் கண்காணிப்பு கெமெரா

kan naga

இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை மீண்டும் ஆரம்பம்

March 7, 2026

பருவகால மழை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவையானது நேற்று மீண்டும்

i

ஈரான் யுத்தக் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம்?

March 7, 2026

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட