‘டித்வா’ பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான விசேட ஒன்றுகூடலும், முக்கிய கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் கையொப்பமிடும் நிகழ்வும் நாளை வியாழக்கிழமை (19) கொழும்பில் நடைபெறவுள்ளது.
மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, கொழும்பு-07 இல் அமைந்துள்ள மகாவலி கேந்திரத்தில் நாளை காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை இடம்பெறவுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்பாட்டில் ஆர்வமுள்ள அனைத்துத் தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவு அழைப்பு விடுத்துள்ளது.