மருத்துவரின் சடலத்தை நடக்க வைத்தவர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

அம்பாறை பொது வைத்தியசாலையில் இயன்முறை மருத்துவராகப் பணியாற்றிய ஷம்யா தர்ஷனி (வயது 33) என்ற பெண் வைத்தியரின் சடலம், தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றிலிருந்து 2026 ஜூன் 17 அன்று மீட்கப்பட்டது. இந்த வைத்தியர், வெலிகம, குருந்துகொடுவ பகுதியைச் சேர்ந்தவராவார்.

தெல்தெனிய பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பூட்டப்பட்டிருந்த கார் ஒன்று சோதனையிடப்பட்டு சடலம் மீட்கப்பட்டது. சம்பவத்தை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான மென்பொருள் பொறியியலாளர், தனது மனைவியுடன் சேர்ந்து 2026 ஜூன் 24 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் வைத்து வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி தவிர, அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கின் விசாரணைகளின் போது பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொறுப்பதிகாரி மற்றும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி என மொத்தம் நான்கு நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சந்தேகநபர்கள் முதன்முதலாக 2026 ஜூன் 26 அன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன் பின்னர், ஜூலை 09 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களது விளக்கமறியல் காலம் ஜூலை 16ஆம் திகதி வரை​ நீடிக்கப்பட்டது.

இந்த வழக்கு, நுவரெலியா நீதிவான் புத்திகா தர்மதாச முன்னிலையில், வியாழக்கிழமை (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர்களின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டது. வியாழக்கிழமை (16) அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்​டபோது, சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. சூம் தொழிநுட்பம் ஊடாகவே வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலதிக விபரங்கள்

அம்பாறை வைத்தியசாலையில் உடற்பயிற்சி நிபுணராக (Physiotherapist) கடமையாற்றி வந்த இவர், வெளிநாடு செல்ல உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்து கடந்த ஜூன் 11ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த பெண், தனது காதலர் என நம்பப்படும் நபர் ஒருவருடன் அண்மையில் நுவரெலியாவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவு, அந்த நபர் பெண்ணை தூக்கிச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காட்சி சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் கண்டி, கன்னொருவ பகுதியை சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் (Software Engineer) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த பெண் வங்கி விபரம் (வங்கி கடன்) மூலம் பெற்ற 15 மில்லியன் ரூபாய் தொகையை சந்தேக நபருக்கு வழங்கியிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திருப்பங்களுக்கு மத்தியிலும், பிரதான சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், விசாரணைகள் தொடர்வதால் அவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

images (19)

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ்தெரிவு!

July 28, 2026

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகர சபையின் உப

5

மேகதாது விவகாரம்: பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

July 28, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த அதிரடி

photo-collage.png (4)

செம்மணி மனித புதைகுழி பேரவலத்திற்கு யார் காரணமென்பது விசாரணைகளின் இறுதியிலேயே தெரிய வரும் – நீதி அமைச்சர்

July 28, 2026

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும்

s

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

July 28, 2026

இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும், தனியார் பட்டப்படிப்பு மையங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் துணை மருத்துவப் பட்டதாரிகள்

a35

கிளிநொச்சி மாவட்ட A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

July 28, 2026

கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் 12 ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம்

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

July 28, 2026

ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

Nali

நீதிபதிகளின் ஓய்வு; சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவை பேச்சாளர்

July 28, 2026

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை ஊடகப்

Crick

கிரிக்கெட்டின் புதிய அரசியலமைப்பு வரைவு கையளிப்பு!

July 28, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய அரசியலமைப்பின் வரைவு, விளையாட்டுத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு தெரிவித்துள்ளது. புதிய

cyb

கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜையின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

July 28, 2026

துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய

exc

மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு

July 28, 2026

மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப்

kapil-sibal-saurav-das-pti

நீட் போராட்ட மாணவர்களின் சட்ட உதவிக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்தார் கபில் சிபல்!

July 28, 2026

புதுடெல்லி: தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் தொடர்ந்து அறவழியில் போராட்டம் நடத்திவிட்டு,

MediaFile

எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!

July 28, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட