கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோரைக் ஒன்றிணைத்து மேற்படிக் கருத்தரங்கு நடைபெற்றதாக பீல் பிராந்திய காவல்துறையின் சமூகவலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்வில் ஏற்புரையாற்றிய பீல் பிராந்திய காவல்துறை துணைத் தலைவர் நிக் மிலினோவிச், எங்களின் தொடர்ச்சியான மனிதக் கடத்தல் விசாரணைகள், உயிர் தப்பியவர்களை பாதுகாக்கவும், அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப தேவையான நிலைத்தன்மையை உறுதி செய்யவும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எவ்வளவு அவசியம் என்பதை தொடர்ந்து காட்டுகின்றன.
அத்துடன் நாங்கள் முன்னெடுக்கும் பணியை சாத்தியமாக்கும் பராமரிப்பு சேவைகளையும் கூட்டாண்மைகளையும் மேலும் விரிவுபடுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளார்.