மத்திய கிழக்கின் மோதலால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக வேண்டும் என்று எதிர்க்கட்சி விரும்புகின்றது; ஆனால் அது ஒருபோதும் நடக்காது

ராஜபக்ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதால் அன்று கியூ.ஆர் முறைமை அமுல்படுத்தப்பட்டது.இரண்டு தலைவர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் இன்று பொருளாதார முன்னெற்றத்துக்கு மத்தியில் க்யூ ஆர் முறைமையை அமுல்படுத்த நேரிட்டுள்ளது.மத்திய கிழக்கின் மோதலால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகாதா,என்று எதிர்க்கட்சியினர் பிரார்த்தனை செய்கிறார்கள்.இவர்களின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது. பூகோள காரணிகளால் ஏற்பட்ட நெருக்கடியை சிறந்த முறையில் வெற்றிக்கொள்வோம் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்குமான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ராஜபக்ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதால் அன்று கியூ.ஆர் முறைமை அமுல்படுத்தப்பட்டது. இரண்டு தலைவர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் இன்று பொருளாதார முன்னெற்றத்துக்கு மத்தியில் க்யூ ஆர் முறைமையை அமுல்படுத்த நேரிட்டுள்ளது. மத்திய கிழக்கின் தற்போதைய மோதலால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளுக்கு நாடு என்ற அடிப்படையில் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

ஈரான் நாட்டு கப்பல் தாக்குதலுக்கு உள்ளான போது எதிர்க்கட்சியினர் மாறுப்பட்ட கருத்துக்களை மாத்திரமே குறிப்பிட்டார்கள். இந்து சமுத்திரத்தில் பல பலமிக்க நாடுகள் இருந்த போதிலும், மனிதாபிமான அடிப்படையில் ஈரானியர்களை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி முன்னிலையானார். ஜனாதிபதியின் தீர்மானத்தை முழு உலகமும் பாராட்டுகிறது. ஆனால் எதிர்க்கட்சியினர் அதனை கண்டுக்கொள்ளவில்லை.

எரிபொருள் விநியோக கட்டமைப்பினால் ஏற்படும் நெருக்கடியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். நாடு என்ற ரீதியில் பூகோள நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. எரிபொருள் முகாமைத்துவம் குறித்து ஆராய அமைச்சர்களான விஜித்த ஹேரத், அனில் ஜயந்த,குமார ஜயகொடி தலைமையிலும், அரச சேவை தொடர்பில் ஆராய பிரதமர் தலைமையிலும், அத்தியாவசிய பண்ட விநியோகம் தொடர்பில் ஆராய பிறிதொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கின் மோதலால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகாதா, என்று எதிர்க்கட்சியினர் பிரார்த்தனை செய்கிறார்கள். தித்வா புயல் தாக்கத்தின் போதும் இவர்கள் இவ்வாறு தான் செயற்பட்டார்கள். ஆனால் நிலைமையை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்தோம்.தற்போதைய நிலைமையையும் வெற்றிக்கொள்வோம். நாட்டு மக்கள் உண்மை நிலைமை மற்றும் யதார்த்தத்தை நன்கு அறிவார்கள்.அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றார்.

Cabinet de

பொருளாதார நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவதற்காக மேற்பார்வைக் குழுக்கள்

March 18, 2026

பொருளாதார நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவதற்காக மேற்பார்வைக் குழுக்களை நிறுவுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும்

Mujibar Rahuman

நாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பற்றதாக செயல்பட வேண்டும்

March 18, 2026

லஞ்ச ஊழல் ஆணைக்குழு அனைவரையும் ஒரேமாதிரி செயற்படுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு ஒருமாதிரியும் ஏனையவர்களுக்கு வேறு மாதிரியும்

rail

புகையிரத சேவைகளை உடனடியாக வலுப்படுத்துமாறு கோரிக்கை

March 18, 2026

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினால் இலங்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, பொதுப் போக்குவரத்து சேவைகளையும், குறிப்பாக புகையிரத சேவையையும்

bima

மத்திய கிழக்கின் மோதலால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக வேண்டும் என்று எதிர்க்கட்சி விரும்புகின்றது; ஆனால் அது ஒருபோதும் நடக்காது

March 18, 2026

ராஜபக்ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதால் அன்று கியூ.ஆர் முறைமை அமுல்படுத்தப்பட்டது.இரண்டு தலைவர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் இன்று பொருளாதார முன்னெற்றத்துக்கு

Gotta

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவிடம் இரு மணிநேரம் விசாரணை!

March 18, 2026

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடித் தொடர்பில், இலஞ்ச

man

விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்காக விசேட பொறிமுறை

March 17, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், மன்னார்

e

பாடசாலைகளின் அன்றாட நிர்வாகம்; கல்வி அமைச்சின் அறிவிப்பு

March 17, 2026

ரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலைகளின் அன்றாட நிர்வாகம் மற்றும் கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக கல்வி,

hu

ஹொர்முஸ் நீரிணையூடாக பாதுகாப்புக்காக கப்பல்களைக் கோரும் ஈரான்

March 17, 2026

வளைகுடாவிலிருந்து ஹொர்முஸ் நீரிணையூடாக இந்தியக் கொடியுடைய அல்லது இந்தியா நோக்கி பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்துக்கான பேச்சுக்களின் அங்கமாக பெப்ரவரியில்

20

இலங்கை கிரிக்கெட் அணி உலக கிண்ணத்தை வென்று 30 ஆண்டுகள்

March 17, 2026

இலங்கை கிரிக்கெட் அணி 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்று 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற

Saji

எரிபொருள் இறக்குமதிக்கு அபாய மதிப்பீடு உள்ளதா? – எதிர்க்கட்சித் தலைவர்

March 17, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் நிலைமை காரணமாக இலங்கைக்கு மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்படக்கூடிய

in

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதான பணப் பரிவர்த்தனை வசதி

March 17, 2026

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பணம் செலுத்துவதற்கான வசதியை மேம்படுத்தும் நோக்கில், NPCI International Payments Limited

gg

78 கிலோ போதைப்பொருள் கிளிநொச்சி கடற்பரப்பில் கைப்பற்றல்

March 17, 2026

கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் மிதந்த சுமார் எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு