இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி மட்டக்களப்பு- கல்லடிப்பாலத்திற்கு அருகிலிருந்து போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
அங்கு ஆரம்பமான போராட்டம் தற்போது திருகோணமலை வீதியூடாக மட்டக்களப்பு நகரத்திற்கு சென்று கொண்டு இருக்கின்றது.
இந்தப் பேரணியிலே கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டப்பட்டவர்களின் உறவுகள்,அரசியல் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.