மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பது குறித்து தேசிய மக்கள் சக்தியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தெரியும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

எதிர்க்கட்சிகள் கூறுவது போல, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதியவர்கள் என்பதும், அவர்களுக்கு அனுபவம் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், அவர்கள் குறிப்பிடும் கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது மற்றும் குடும்ப அரசியலை முன்னெடுப்பது போன்ற அனுபவங்கள் எங்களிடம் இல்லை.

ஆயினும், மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும், எந்த முறையில் சேவை செய்ய வேண்டும் என்பது குறித்து, பாராளுமன்றத்திற்குப் புதியவர்களாக இருந்தாலும், தேசிய மக்கள் சக்தியின் ஒவ்வொரு உறுப்பினரும் அரசியல் வாழ்க்கையில் பல வருட அனுபவங்களைக் கொண்டுள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல வருட அனுபவம் கொண்டவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நூறு ரூபாயோ அல்லது அதற்குக் குறைவாகவோதான் அதிகரித்து வழங்கினார்கள். ஆனால், அனுபவமற்றவர்கள் என்று எங்களைக் கூறும் நாங்கள், 400 ரூபாயை உயர்த்தி வழங்கியுள்ளோம். அதுமட்டுமல்லாமல், கடந்த காலத்தில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளுக்குக் காணி உறுதிப்பத்திரங்களை அவர்களால் வழங்க முடியவில்லை. ஆனால், நாங்கள் கட்டிக்கொடுக்கும் வீடுகளுக்குக் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.

எனவே, யாருக்கு உண்மையான அனுபவம் இருக்கிறது என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். மேலும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றிப் பரவலாகப் பேசப்பட்டாலும், அரசு ஊழியர்களுக்கும் கணிசமான சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்களுக்கு 2025 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்ட சம்பளம், 2026 ஆம் ஆண்டு அவர்களின் கைகளுக்குக் கிடைத்துள்ளது. இது தொடர்பாக எங்கும் பெரிதாகப் பேசப்படவில்லை.

ஆகவே, தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகளைக் கட்டம் கட்டமாகச் சரியான முறையில் நடைமுறைப்படுத்தி வருகிறோம். மக்கள் எம்மோடு இருக்கிறார்கள், நாங்களும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சிகள் எங்களை விமர்சித்துக் கொண்டே இருக்கட்டும், நாங்கள் மக்களுக்கான சேவையைத் தொடர்ச்சியாக முன்னெடுப்போம். ‘மக்கள் என்றும் எங்கள் பக்கமே’ என தெரிவித்தார்.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த