மத்திய மலைநாட்டில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை மற்றும் அதன் நீர்ப்பாசனப் பகுதிகளின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கெலிஓயா நகைப் பகுதி மற்றும் மகாவலி நதியை ஒட்டியுள்ள பேராதனைப் பல்கலைக்கழக வளாகக் கட்டிடங்களில் வசிப்பவர்கள் மற்றும் தங்கியிருப்பவர்கள் அனைவரும் திடீர் வெள்ளப் பெருக்கு அபாயம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நதியின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.