பெல்லன்வில படுகொலை: பின்னணி அம்பலம்!

பெல்லன்வில உணவக உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மின்னேரியா இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கிகளைக் கடத்திய சம்பவத்தின் சந்தேகநபர் எனத் தெரியவந்துள்ளது.

பெல்லன்வில பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரை நேற்று (25) இரவில் சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை நவகமுவ பொது மயானத்திற்கு அருகில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தெஹிவளை – பொரலஸ்கமுவ வீதியில் பெல்லன்வில நடைபாதை நுழைவாயிலுக்கு எதிரில் உள்ள உணவகத்திற்கு அருகில் நேற்று இரவு 7.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த உணவக உரிமையாளரை இலக்கு வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த வேளையில், உணவக உரிமையாளர் உணவகத்திற்கு வெளியே சிகரெட் புகைத்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அவரது வயிற்றுப் பகுதியில் காயமேற்பட்டதையடுத்து, அவர் உணவகத்திற்குள் ஓடிச் சென்றுள்ளார்.

பின்னர் அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், காயங்களின் தீவிரத்தன்மை காரணமாக உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் உணவகத்தின் உரிமையாளரான மல்லவ ஆரச்சிகே நெல்சன் சுதத் அமரசிங்க எனப்படும் 55 வயதுடைய நபராவார்.

நேற்று இரவே சம்பவ இடத்திற்கு வந்த பொரலஸ்கமுவ பொலிஸார், கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கின.

முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்த உணவக உரிமையாளர் ‘கொஸ் மல்லி’ எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் உறவினர் எனத் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, கொஸ் மல்லியின் எதிர்த்தரப்பான ‘சண்டோ’ அல்லது ‘அசங்க’ என்பவர்களே இத்துப்பாக்கிச் சூட்டை வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விசாரணைகளைத் தொடங்கிய பொலிஸார், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் குறித்த தகவல்களை ஏனைய பகுதி பொலிஸ் சோதனைக் சாவடிகளில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்தனர்.

அதற்கமைய, குறித்த தகவல்களுக்குப் பொருத்தமான மோட்டார் சைக்கிளும் இரு நபர்களும் நவகமுவ பகுதியில் நடமாடுவதைக் கண்ட பொலிஸ் அதிகாரிகள் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர்.

அப்போது, குறித்த இருவரும் தங்கள் மோட்டார் சைக்கிளை நவகமுவ, நிஸ்சரண சித்பிம பொது மயானத்திற்கு அருகில் நிறுத்திவிட்டு, முகமூடிகள் மற்றும் கையுறைகளைக் கழற்றிவிட்டு அவ்விடத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

இரு சந்தேகநபர்களையும் கைது செய்த பொலிஸார் சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அவர்களின் கைபேசிகளைப் பரிசோதித்தபோது பெல்லன்வில கொலை தொடர்பான குரல் பதிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து கொலைச் சம்பவம் தொடர்பில் அவ்விருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மேலும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி பெறப்படவுள்ளது.

li

இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

July 26, 2026

லிந்துலை – மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின்

dol

எல் நினோவால் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும்

July 26, 2026

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆபிரிக்க

ddfs

இத்தாலியிலிருந்து சூட்சுமமாக கொண்டுவரப்பட்ட உலோகக் கூடுகள்

July 26, 2026

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க

ravikara

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து…

July 26, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம்

s

45 பேரை தென்சீனக் கடலில் மீட்க உதவிய சீனாவுக்கு வியட்நாம் நன்றி

July 26, 2026

ன்சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த ‘கோய் நுயென் 18’ என்ற சரக்குக் கப்பல் மோசமான வானிலை காரணமாக நன்ஷா தீவுகள்

BRXPQSLKS5GHVGE3XXHDA5IH6M

நோர்த் யோர்க்கில் துப்பாக்கியுடன் காணப்பட்டதாகக் கூறப்படும் நபரைத் தேடும் பொலிஸார்

July 26, 2026

வெள்ளிக்கிழமை பிற்பகல் நோர்த் யோர்க் (North York) பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் தேடி

N32AHFWGRNDKDEHVEIQNHXL7SQ

கிறிஸ்டி பிட்ஸ் (Christie Pits) அருகே இருவர் மீது கத்திக்குத்து: முகமூடி அணிந்த சந்தேகநபரைத் தேடும் டொராண்டோ பொலிஸார்

July 26, 2026

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமை இரவோடு இரவாக இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத்

nufsdf

நுவரெலியா வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ

July 26, 2026

நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ காரணமாக இதுவரை

se

கடலலையில் சிக்கிய இருவர் மீட்பு

July 26, 2026

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துக்கால கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நீரோடைக்குச் சிக்கி சனிக்கிழமை (25) அன்று கடலுக்குள் அடித்துச்

arr

உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை; மயானத்தில் இருவர் கைது

July 26, 2026

பொரலஸ்துவை – பெல்லன்வில உணவக உரிமையாளருக்குச் சுட்டுக்கொலை செய்துவிட்டுத் தப்பியோடிக்கொண்டிருந்த துப்பாக்கித்தாரியும் ஓட்டுநரும், துப்பாக்கிச் சூடு இடம்பெற்று ஒரு மணி

de

டெங்கு பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

July 26, 2026

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை

acci main

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு; புளியங்குளத்தில் சம்பவம்

July 26, 2026

புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 பிரதான வீதியின் பூதூர் பகுதியில், வவுனியா திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று