பெண்களின் பயணப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள்!

கிழக்கு மாகாணத்தில் பெண்களின் பயணப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் பல முக்கிய விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் இலங்கையை உலுக்கிய பாழ்ங்கிணறு படுகொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

பொறுப்பதிகாரி மேனன் விடுத்துள்ள அறிவுறுத்தலில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஆபரணங்கள்: பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது, பெறுமதிமிக்க தங்க நகைகளை அநாவசியமாக வெளிப்படையாக அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

பயணம்: முன்பின் தெரியாத முச்சக்கர வண்டிகள் (Auto) உள்ளிட்ட அறிமுகமில்லாத வாகனங்களில் ஏறுவதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை அறிமுகமான வாகனங்களைப் பயன்படுத்தவும்.
குழுவாகச் செல்லுதல்: பெண்கள் தனித்துப் பயணிப்பதைத் தவிர்த்து, குழுவாகவோ அல்லது உறவினர்களுடனோ பயணங்களை மேற்கொள்வது பாதுகாப்பானது. உங்களது பயண விபரங்களை நெருங்கிய உறவினர்களிடம் முன்கூட்டியே பகிர்ந்து கொள்ளுங்கள்.

உணவு மற்றும் பானங்கள்: அந்நியர்கள் வழங்கும் உணவுப் பொருட்கள் அல்லது பானங்களை எக்காரணம் கொண்டும் உட்கொள்ள வேண்டாம். மயக்கமருந்து கொடுத்து நகைகளைப் பறிக்கும் சம்பவங்கள் குறித்து அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும்.

அவசர உதவி: ஏதேனும் ஆபத்தான அல்லது சந்தேகத்திற்கிடமான சூழல் ஏற்பட்டால், உடனடியாக 119 எனும் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டு அவர் மேலும் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்:

தனிப்பட்ட வாகனங்களைத் தவிர்த்துப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துதல் சிறந்தது.

ஒரே பயணத்தில் பல வேலைகளைத் திட்டமிட்டு முடிப்பதன் மூலமும், அத்தியாவசியப் பொருட்களை அருகிலுள்ள கடைகளில் கொள்வனவு செய்வதன் மூலமும் பயணங்களைக் குறைக்கலாம்.
முடிந்தவரை கல்வி வகுப்புகள் மற்றும் அலுவலகப் பணிகளை இணையதளம் (Online) வாயிலாக மேற்கொள்ள முயற்சிப்பது காலத்திற்குப் பொருத்தமானது.

குறுகிய தூரங்களுக்கு நடைபயணம் அல்லது மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் எரிபொருள் வளத்தைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

Air _wo

தீயணைப்பு வாகனத்தின் மீது மோதிய ஏயர் கனடா விமான விபத்தில் 330 அடி தூக்கி வீசப்பட்ட பெண் உயிர் பிழைத்த அதிசயம்

March 24, 2026

ஓடுபாதையில் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி ஏர் கனடா விமானம் விபத்துக்குள்ளானதில் 330 அடி தூக்கி வீசப்பட்ட பெண் உயிர்

Peel

திருடப்பட்ட 8 வாகனங்கள் கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையால் மீட்பு!

March 24, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையானது கடந்த நாட்களில் ஆயுதங்களுடன் நடத்தப்பட்ட வன்முறை கார் பறிப்புகள் தொடர்பான விசாரணையின் பின்னர் எட்டு

w

புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி நாளை பதவியேற்பு!

March 24, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, தற்போதைய உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதியும் கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி.வேல்நம்பி நாளை புதன்கிழமை பதவி

Vive

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு விசேட எரிபொருள் விநியோகம்

March 24, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சேவை வழங்குநர்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு விசேட எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க நடவடிக்கை

MAnnar

மன்னார் மக்களின் அடிப்படை மனித உரிமை மீறப்படுவதாக ஐ.நா. பிரதிநிதியிடம் முறையீடு

March 24, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிக்கும், மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் (MSEDO) பணிப்பாளரும் சிவில் சமூகச்

hurm

ஹார்முஸ் ஜலசந்தி ஊடகப் பயணிக்கும் கப்பலுக்கு ரூ.19 கோடி வசூலிக்க ஈரான் முடிவு?

March 24, 2026

மேற்கு ஆசிய போர் காரணமாக, நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் காத்துக் கிடக்கின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலை

tr

எரிசக்தி நெருக்கடிக்கு; திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்

March 24, 2026

இலங்கையின் எரிசக்தி நெருக்கடிக்கு நீண்டகால மற்றும் நிலையான தீர்வாக, திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின்

5

‘மலையகம் அரசியல் அரங்கம்’ 5 அம்சக் கோரிக்கைகளுடன் போராட்டம்

March 24, 2026

மலையக மக்களின் பிரதான பிரச்சினைகளில் ஒன்றான அரச சேவைகள் மக்களைச் சென்றடையாமைக்குத் தீர்வு காணும் வகையில், நுவரெலியா மாவட்டத்தில் முறையான

Matala airport

மாற்று விமான போக்குவரத்து மையமாக உருவெடுக்கும் இலங்கையின் மத்தல விமான நிலையம்

March 24, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், மத்தல சர்வதேச விமான நிலையத்தைத் தரையிறக்கக் கட்டணமின்றிப் பயன்படுத்துவதற்குப் பல விமான

Cr

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஜனாதிபதி செயலகத்தில் மனு

March 24, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (Sri Lanka Cricket) தலைவர் உடனடியாக பதவிலக வேண்டும் என வலியுறுத்தி, ஒரு குழுவினர் இன்று

1688202098-EARTHQUAKE-6

தென் பசிபிக் கடலில் உள்ள தொங்கா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

March 24, 2026

தென் பசிபிக் கடலில் உள்ள தொங்கா (Tonga) அருகே செவ்வாய்க்கிழமை ரிக்டர் அளவில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Ranil

இலங்கையில் வன்முறைகள் அதிகரிப்பதால் பொதுமக்கள் நீதித்துறையினருக்கு ஆபத்து – ரணில் சஜித் நாமல் சர்வதேச அமைப்புகளுக்கு கூட்டாகக் கடிதம்

March 24, 2026

இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சட்ட அமலாக்கத்துறை அரசியல்மயமாக்கப்பட்டுள்ள சூழலில், சட்டத்தரணிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ள கடுமையான அச்சுறுத்தல்கள் குறித்து