புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளின் தேவைகளை நிறைவேற்றவே அரசுசெயற்படுகிறது – இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர்

இந்த அரசாங்கத்துக்குச் செய்யத் தெரிந்த ஒன்றும் இல்லை இவர்கள் முழுமையாக டயஸ்போரா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே செயற்படுகிறார்கள். நாமல் ராஜபக்ஷவை அடுத்த தேர்தலில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை என பௌத்த தேசியவாத அமைப்பான ‘ராவணா பலய’ அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராமங்கள் தோறும் வேலைத்திட்டத்தின் கீழ், அநுராதபுரம் மாவட்டத்தில் கெக்கிராவை தொகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு, அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜானக திஸ்ஸகுட்டி ஆராச்சி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஜி. வீரசேன கமகே, சஞ்சீவ எதிரிமான்ன, சுமித் உடுக்கும்புர, ஜயந்த கெட்டகொட மற்றும் ஜகத் குமார உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சத்தாதிஸ்ஸ தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இன்று அரசாங்கத்தில் இருப்பவர்கள் எங்களிடம் வந்து, அடுத்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கேட்கிறார்கள். நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகச் செயற்படும் தரப்பினர், அவரிடமிருந்து விலகுமாறு எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.

அவர்களுக்கு நாங்கள் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறோம்; உங்களுக்கு இருப்பது போன்ற முதுகெலும்பில்லாத நிலை எங்களுக்கு இல்லை. நாமல் ராஜபக்ஷவை அடுத்த தேர்தலில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை என்பதை தெளிவாகக் கூறுகிறோம்.

இந்த அரசாங்கத்துக்குச் செய்யத் தெரிந்த ஒன்றும் இல்லை இவர்கள் முழுமையாக டயஸ்போரா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே செயற்படுகிறார்கள்.

இன்று மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை சிறைவைத்து, இந்த நாட்டுக்குச் சேவை செய்த அந்த அன்பான இராணுவ வீரரைத் தண்டித்து, சித்திரவதைக்கு உள்ளாக்கி வருகிறார்கள். நாம் இன்று அனுபவிக்கும் இந்தச் சுதந்திரத்துக்கு, அன்றைய புலனாய்வுப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய சுரேஷ் சலே போன்றோரின் அர்ப்பணிப்புதான் காரணம்.

அவரைத் துன்புறுத்துவது மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ அல்லது நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயரைச் சிதைப்பதற்காகவே ஆகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்று கூறிக்கொண்டு, இன்று சுரேஷ் சலேவைக் கைது செய்து வைத்திருக்கிறார்கள். உண்மையில் அந்தத் தாக்குதலை நடத்திய இப்ராஹிம் என்பவர் அன்றே அந்தத் தாக்குதலில் உயிரிழந்தார்.

ஆனால், உண்மையான சூத்திரதாரிகள் இன்று சுதந்திரமாக இருக்கிறார்கள். தனது உயிரையும் பொருட்படுத்தாது நாட்டுக்காகப் பணியாற்றிய சுரேஷ் சலேவைப் பார்க்க இன்று அவரது மனைவியும் பிள்ளைகளும் சென்றபோது, நான் இந்த நாட்டை நேசித்தேன், இன்றும் நேசிக்கிறேன், எனது இறுதிக்காலத்தில் எனது கண்களைத் தானம் செய்யத் தீர்மானித்திருக்கிறேன் என்று அவர் கூறியதாக அறிந்து நான் கண்கலங்கினேன்.

இவ்வளவு தேசபக்தி கொண்டவரைத் தண்டிப்பது ஏன்? சுரேஷ் சலே வெளியே வந்தால் இவர்களின் முகத்திரை கிழிந்துவிடும் என்பதால் இவர்கள் பயப்படுகிறார்கள்.

அதேபோல், எமது புனித பூமிகளான தலதா மாளிகை, அட்டமஸ்தானம், சொலஸ்மஸ்தானம் ஆகியவற்றை அரசாங்கத்தின் கீழ் கையகப்படுத்த வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். இத்தகைய புனித இடங்களை சட்டத்தின் கீழ் கையகப்படுத்த நினைப்பது கூடப் பெரும் தவறாகும். எமது சம்பிரதாயங்களை, எமது மதத்தை, எமது தேசத்தை அழிக்க நாங்கள் இடமளிக்க மாட்டோம்.

நாமல் ராஜபக்ஷவைக் கண்டால் இவர்களுக்குப் பயம். அவர் மகிந்த ராஜபக்ஷ என்ற சிங்கத்தின் மூத்த புதல்வர் என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் ஜனாதிபதியானால் மாத்திரமே இந்த நாடு மீண்டும் சரியான பாதையில் செல்லும். 2015க்குப் பிறகு இந்த நாட்டில் முதுகெலும்புள்ள ஒரு தலைவர் இருக்கவில்லை.

இன்று அரசாங்கம் மணல் மூட்டைகளை வைத்து பாலம் அமைப்பதாகக் கூறிக்கொண்டு, தங்களுக்கு வேண்டியபடி பணத்தைச் சுருட்டிக்கொள்கிறார்கள். இவ்வாறான முறையற்ற செயல்களை நிறுத்தி, சிங்கள, பௌத்த, கத்தோலிக்க, முஸ்லிம் மற்றும் தமிழ் என அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க, 2029 இல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாமல் ராஜபக்ஷவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குவோம் என்றார்.

sajith 5

பௌத்தமதகுருவின் காவியுடையை சாதாரண மக்கள் களைவதற்கு உரிமையில்லை – இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் – சஜித்

October 13, 2026

இலங்கையின் அரசமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள நாட்டில் சமீபத்தில் இடம்பெற்ற சில விடயங்கள் கவலையளிக்கின்றன என எதிர்கட்சி தலைவர் சஜித்

chem_1

செம்மணி பற்றி வினோத உடைப் போட்டி; சிறுவனின் பெற்றோருக்கு விசாரணை!

October 13, 2026

ம்மணியில் இடம்பெற்ற அவலத்தை சித்தரித்து வினோத உடைப் போட்டியில் அதனைப் பிரதிபலித்த மாணவனின் பெற்றோரை மருதங்கேணிப் பொலிஸார் இன்று விசாரணைக்கு

toronto mayor election

நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாக மலிவு விலை வாழ்க்கை மற்றும் வீடமைப்பு நடவடிக்கைகளை டொரண்டோ வாக்காளர்கள் விரும்புகின்றனர்

October 13, 2026

டொரண்டோவின் முன்னணி மேயர் வேட்பாளர்கள் இந்த மாத நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாகத் தங்களது பார்வையையும் திட்டங்களையும் முன்வைத்து நகரம் முழுவதும்

Gnanasara-Thera

ஞானசார தேரர் கடும் மன உளைச்சலில்- நஞ்சருந்தி உயிர்துறக்கப்போவதாக தெரிவித்தார்- பௌத்தமதகுரு

October 13, 2026

பொதுபல சேனாவின் ஞானசார தேரர் கடும் மன அழுத்தத்தில் உள்ளார் விசம் அருந்தி தற்கொலை செய்து கொள்வது குறித்து சிந்திக்கின்றார்

Sakara

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சாகர காரியவசம்!

October 13, 2026

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை

mini

அமைச்சரைச் சந்திக்க தமிழ் பெண்கள் சங்கம் கோரிக்கை

October 13, 2026

சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர்

zer

சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

October 13, 2026

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி

fue

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

October 13, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026

arju

அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!

October 13, 2026

டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்