யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் முச்சக்கர வாகனமும் மோதி விபத்துக்கு உள்ளானது. முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஒருவர் உயிரிழந்த நிலையில், ஏனைய இருவருக்கும் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன