இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட தமிழ் பாடகர் சங்கீர்த்தன் கணேசுகுமாரை உடனடியாக விடுதலை செய்து தாயகம் கொண்டுவரக் கோரி, பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கான விடுதலை வேட்டைக்காரர்கள் நேற்று 11ஆம் திகதி பிரித்தானிய இலங்கை உயர் ஆணையகத்திற்கு வெளியே ஒரு போராட்டம் நடாத்தியுள்ளார்கள்.
அத்துடன் இந்தப் போராட்டக்காரர்கள் நாங்கள் சங்கீதனுக்கு ஆதரவாக நிற்பதோடு, நீதி, உரிய சட்ட நடைமுறைகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை நிலைநாட்டுமாறு இலங்கை அதிகாரிகளை வலியுறுத்துகிறோம். தமிழர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது மிகுந்த கவலைக்குரிய விஷயமாக இருப்பதோடு, கருத்துச் சுதந்திரம் மற்றும் குடிமை உரிமைகள் தொடர்பான முக்கிய கேள்விகளையும் எழுப்புகிறது என தெரிவித்திருக்கின்றார்கள்.
நீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளில் நம்பிக்கை கொண்ட அனைவரையும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்து, தமிழ் சமூகத்துடன் துணை நிற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்திருக்கின்றார்கள்.