பிரதமர் ஹரிணி பிரித்தானியாவில் தங்கியிருந்த இல்லம் குறித்தும் சர்ச்சை

இலங்கை அரசியல் களத்தில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரின் பிரித்தானிய விஜயங்களின் போதான பொதுப்பண பயன்பாடு விதம் பேசுபொருளாகியுள்ளது.

22 ஆவது பொதுநலவாய கல்வி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரித்தானியா சென்றிருந்தார்.

இதன்போது, பிரதமர் ஹரிணி தேவையில்லாத செலவுகளைத் தவிர்ப்பதற்காக அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்தார்.

வழக்கமாக அரசியல்வாதிகள் அரச செலவில் நட்சத்திர விடுதிகளில் தங்குவதே நடைமுறையாக இருந்த நிலையில், பிரதமரின் இச்செயல் பேசுபொருளாகியுள்ளது.

விடுதிச் செலவுகளைக் குறைப்பதற்காகவே இந்த இல்லம் அமைக்கப்பட்டிருந்தாலும், நீண்ட காலத்திற்குப் பிறகு இதனைப் பயன்படுத்தி பிரதமர் ஒரு புதிய முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளார்.

மறுபுறம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானிய விஜயத்தின் போது 16.6 மில்லியன் ரூபாய் பொதுப்பணம் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சர்ச்சை வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, ரணிலின் பயணம் தொடர்பில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன, அதாவது, வழக்குத் தொடர போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் வழக்குத் தொடர முடியும் எனவும் வாதம் எழுந்துள்ளது.

விசாரணைகளை மேற்பார்வையிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, ரணில் விக்ரமசிங்க அல்லது முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு எதிராக குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

கியூபாவிலிருந்து நியூயோர்க் ஊடாக இலங்கை திரும்பும் வழியில் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவில் தங்குவது வழமையான ஒன்றுதான் என்பதால், வொல்வர்ஹாம்டன் (Wolverhampton) பல்கலைக்கழக அழைப்பிதழ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் அங்கு தங்கியிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) குழுவினர் பரஸ்பர சட்ட உதவிச் சட்டத்தின் (MLA) கீழ் முறையான அனுமதியின்றி பிரித்தானியா சென்றதால், அங்கு அவர்களால் உத்தியோகபூர்வ வாக்குமூலங்களைப் பதிவு செய்ய முடியாமல் போனதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், இந்த விசாரணையின் தலைமை மேற்பார்வை அதிகாரியான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் CID அதிகாரிகள், தற்போதைய ஆதாரங்களின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரலாம் என்ற மாற்றுக்கருத்தை முன்வைத்துள்ளளர்.

அத்துடன், ரணிலின் முன்னாள் செயலாளரைக் கைது செய்ய போதிய ஆதாரங்கள் இருப்பதாக அரச சட்டத்தரணி சமதாரி பியசேனவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் விபரங்களை வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த எழுத்துப்பூர்வ கோரிக்கைக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

b

குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

September 13, 2026

தெஹிவளை வீடொன்று மீது அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

bom

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

September 13, 2026

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்

pa

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

September 13, 2026

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து

thal

தலைமன்னார் கடலில் மணல்மேட்டில் வழிதவறியவரை மீட்ட கடற்படையினர்

September 13, 2026

இலங்கை கடற்படையினர் தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடலில் மணல்மேட்டில் வழிதவறிய நபர் ஒருவரை மீட்டதுடன், அந்த நபருக்கு தேவையான மனிதநேய

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை