ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களுக்கு போலி கடவுச்சீட்டினை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் குடிவரவு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு திணைக்களத்தில் வைத்து உதவிக்கட்டுப்பாட்டாளரை கைதுசெய்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டவர் கம்பஹாவை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.