பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
மெஹிதி ஹாசன் மிராஜ் தலைமையிலான இந்த அணியில் சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இடம்பெறவில்லை.
பங்களாதேஷ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஹசன் மஹ்மூத் மற்றும் தன்சிம் ஹாசன் சாகிப் ஆகியோர் காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு அனுபவ வீரர் அபிஃப் ஹொசைன் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், மஹிதுல் இஸ்லாம் புயான் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
இந்த ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளும் டாக்காவில் முறையே மார்ச் 11, 13 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளன.